பிறை ஒண் வடிவம்
தேய்த்து ஒளி சூழ் பிலிற்றும் அனிச்சப்
பதத்தாளும்,
மறை ஒண் வடிவம் போர்த்து இலங்கி மலர்க் கோல் ஓங்கு
மாதவனும்,
நறை ஒண் வடிவு அம் துணர்ப் பதத்தை நண்ணி ஏற்றி
ஆசியைக் கேட்டு,
உறை ஒண் வடிவம் கொள் முகில் போல் உடல் கொள்
இறைவன் ஏந்தினரே. |
பிறை மதியின்
ஒளி வடிவத்தைக் காலால் மிதித்துத் தேய்த்து தன்
ஒளியைச் சுற்றிலும் பரப்பும் அனிச்ச மலர் போல் மெல்லிய அடிகளைக்
கொண்ட மரியாளும், வேதத்தின் ஒளி வடிவத்தை அணிந்து விளங்கித்
தன் மலர்க்கோலால் உயர்வு கொண்ட பெருந்தவத்தோனாகிய சூசையும்,
தேனும் ஒளி வடிவுமாய் அழகிய மலர் போன்ற அடியை அணுகிப்
போற்றி ஆசி கேட்டு, துளியை உள்ளடக்கி் ஒளி வடிவம் கொண்டுள்ள
மேகம் போல் தன் தெய்வத்துவத்தை உள்ளடக்கி உடல் கொண்டு
பிறந்துள்ள ஆண்டவனை ஏந்தி எடுத்துக் கொண்டனர்.
'ஏந்தினர்'
என்ற பன்மைப் பொருளை, இருவரும் மாற்றி மாற்றி
ஏந்திக் கொண்டனர் என்று கொள்க.
5 |
விண்ணு
மண்ணும் பொதுவற்று விதித்து மருளாற் புரிந்தளித்து
மெண்ணு மெள்ளு நீத்தகுணத் திருமை யேந்து மனையாள்வான்
கண்ணுங் கையு மருட்புரியக் கருணைக் கடலோன் புறத்தேகி
மண்ணும் விண்ணு முவந்தநிலை வகுத்தற் காற்றாப் பாநிலையே |
|
விண்ணும் மண்ணும்
பொது அற்று விதித்தும், அருளால் புரிந்து
அளித்தும்,
எண்ணும் எள்ளும் நீத்த குணத்து இருமை ஏந்தும், எனை ஆள்வான்,
கண்ணும் கையும் அருள் புரிய, கருணைக் கடலோன், புறத்து ஏகி,
மண்ணும் விண்ணும் உவந்த நிலை வகுத்ததற்கு ஆற்றா பா நிலையே. |
|