பக்கம் எண் :

முதற் காண்டம்717

     தெய்வம் எனப்படும் பிறர்க்கும் பொது என்று இல்லாமல்,
விண்ணுலகையும் மண்ணுலகையும் தானே படைத்தும், கருணையால்
விருப்பத்தோடு காத்தும், எண்ணிக்கையும் இகழ்ச்சியும் இல்லாத அரிய
குணங்களோடு பெருமை கொண்டவனும், என்னை அடிமையாகக் கொண்டு
ஆள்வோனும், கருணைக் கடலாய் விளங்குபவனுமாகிய ஆண்டவன், தன்
கண்களாலும் கைகளாலும் எங்கும் அருளைப் பொழியவென்று வெளியே
புறப்பட்டதும், மண்ணுலகும் விண்ணுலகும் மகிழ்ந்த நிலையை வகுத்துச்
சொல்ல, பாக்களின் அமைப்பு சொல் பொருள் போன்ற நிலைகளெல்லாம்
ஈடு கொடுப்பன அல்ல.

     'இருமை' என்பதற்கு, 'தெய்வத்துவம் மனிதத்துவமாகிய இருதுவம்
எனக் கொண்டு பொருள் விரித்தலும் ஒன்று,
 
                       6
கான்றோய் மலர்மேற் றேன்றுளியோ கதிர்தோய் வளைமேன்
                                   முத்தணியோ
தேன்றோய் கமலத் தனப்பார்ப்போ சீர்தோய் பொன்மேற்
                                   றுகிர்ச்செப்போ
மீன்றோய் முடிசூழ் தாய்கரத்தில் வேய்ந்தான் முகத்தில்
                                   வில்வீசி
வான்றோய் முகில்தோய் சுடரன்ன மனுவின் னுடல்தோய்ந்
                                   துதித்த பிரான்.
 
கான் தோய் மலர் மேல் தேன் துளியோ? கதிர் தோய் வளை
                                மேல் முத்து அணியோ?
தேன் தோய் கமலத்து அனப் பார்ப்போ? சீர் தோய் பொன் மேல்
                                துகிர்ச் செப்போ?
மீன் தோய் முடி சூழ் தாய் கரத்தில் வேய்ந்தான், முகத்தில் வில்
                                வீசி,
வான் தோய் முகில் தோய் சுடர் அன்ன, மனுவின் உடல்
                                தோய்ந்து உதித்த பிரான்.

     வானத்தில் பொருந்திய மேகம் மூடி மறைத்த பகலவன் போல, மனித
உடலைப் போர்த்திக் கொண்டு பிறந்த ஆண்டவன், தன் முகத்தில் ஒளி
வீசிய வண்ணம், விண்மீன்கள் பொருந்திய முடியை அணிந்த தாயின்
கையில் அமர்ந்து தோன்றினான். அத்தோற்றத்தை, வாசனை தோய்ந்த