பக்கம் எண் :

முதற் காண்டம்719

                        8
பைந்தார் பூண்ட பிறன்மனையாள் பற்றிச் சென்ற
                               கண்மறுத்த
செந்தார் நல்லோர் மாட்சியெனச் சிறுவ னோகத்
                               தீண்டியதீ
வெந்தார் வெய்யோன் புழுங்கியதன் வில்லைச் சுருக்கிப்
                               புதுமகளிர்
தந்தார் மறைவி னின்றதெனத் தண்கார் மறைவுற்
                               றொளித்தனனே.
 
பைந் தார் பூண்ட பிறன் மனையாள் பற்றிச் சென்ற கண்
                                 மறுத்த,
செம் தார் நல்லோர் மாட்சி என, சிறுவன் நோக, தீண்டிய தீ,
வெம் தார் வெய்யோன், புழுங்கிய தன் வில்லைச் சுருக்கி,
                                 புது மகளிர்
தம் தார் மறைவில் நின்றது என, தண் கார் மறைவு உற்று
                                 ஒளித்தனனே.

     பசுமையான மணமாலை பூண்டு நின்ற பிறன் மனையாளைக் கருதிச்
சென்ற தம் கண்ணை மறுத்துத் திருப்பிய, செம்மைப் பண்பை மாலையாகக்
கொண்டுள்ள நல்லோரின் மாண்புக்கு ஒப்பாக, தொழாதவரைத் தீண்டிய
அதே நெருப்புக் கதிரால் சிறுவனாகிய குழந்தை நாதனும் வருந்தக் கண்டு,
வெப்பத்தை மாலையாகக் கொண்டுள்ள ஞாயிறு, புழுக்கம் தந்து நின்ற தன்
ஒளியைச் சுருக்கி, புது மண மகளிர் தம் மாலையின் மறைவில் நின்றதுபோல்,
தானும் குளிர்ந்த கருமேகத்தின் உள்ளே மறைந்து ஒளித்துக்கொண்டான்.

     மணமகளிர் மாலையுள் மறைவதும், ஞாயிறு கருமேகத்துள் மறைவதும்
நாணம் பற்றிய செயலெனக் கொள்க. பசுமை + தார் - பைந்தார்.
 
                     9
கடுத்த பருதி கதிர்ச்சரங்கள் காத்த வட்டத் திளமுகிலோ
டடுத்த தென்றல் சாமரையிட் டனைய வீசி நறும்பைம்பூ
புடுத்த வண்ணத் துள்ளுளபே ருவகை பொறித்த
                               முகத்துலகந்
தொடுத்த வுவப்பி லின்பொழியா தோன்றிற் றன்றோர்
                               விழாவணியே.