கடுத்த பருதி
கதிர்ச் சரங்கள் காத்த வட்டத்து இளமுகிலோடு,
அடுத்த தென்றல் சாமரை இட்டு அனைய வீசி, நறும் பைம் பூ
உடுத்த வண்ணத்து, உள் உள பேர் உவகை பொறித்த
முகத்து, உலகம்
தொடுத்த உவப்பில் இன்பு ஒழியா தோன்றிற்று அன்று ஓர்
விழா அணியே. |
சினந்து
நின்ற கதிரவனின் கதிராகிய அம்புகளைத் தடுத்துக் காத்த
கேடயம் போன்ற இள மேகத்தோடு, அடுத்து வந்த தென்றற் காற்று
வெண்சாமரை இட்டதுபோல் வீசி, தன் உள்ளத்திற் கொண்ட பெரு
மகிழ்ச்சியைப் பொறித்து வைத்த முகம் போல நறுமணமுள்ள பசுமையான
மலர்களை உடுத்த கோலமாக இவ்வுலகம் கொண்ட மகிழ்ச்சியால் தோன்றிய
இன்பம் நீங்கப் பொறாமல், அன்று அங்கு ஒரு விழாக்கோலமே தோன்றிற்று.
10 |
சிரைவாய்க்
கனியாழ் தும்பிசெயச் சிகிக ளாடு நாடகமு
மிரைவாய்க் குயில்க டீங்குரலு னிணர்வாய்ப் பொழில்கள்
பெய்நறவுங்
கரைவாய்ப் பொய்கை மலர்க்கரத்திற் கனிந்தேந் தியதீந்
தேன்மணமும்
விரைவாய்த் தடத்தார்ந் தெதிரெதிரே விருந்து செய்யப்
போயினரால். |
|
சிரை வாய்க்
கனி யாழ் தும்பி செய, சிகிகள் ஆடும் நாடகமும்,
இரை வாய்க் குயில்கள் தீம் குரலும், இணர் வாய்ப் பொழில்கள்
பெய் நறவும்
கரை வாய்ப் பொய்கை மலர்க் கரத்தில் கனிந்து ஏந்திய தீம்
தேன் மணமும்,
விரை வாய்த் தடத்து ஆர்ந்து, எதிர் எதிரே விருந்து செய்யப்
போயினர் ஆல்.
|
நரம்பினிடமாய்க்
கனியும் யாழின் இசையை வண்டுகள் எழுப்பவும்,
அதற்குப் பொருந்த மயில்கள் ஆடும் நடனமும், இரையும் வாயை உடைய
|