குயில்களின் இனிய
குரலும், பூங்கொத்துக்களினின்று சோலைகள் பொழியும்
தேனும், தடாகங்கள் தம் மலராகிய கையில் கனிவோடு கரையை நோக்கி
நீட்டித் தந்த இனிய தேனின் மணமுமாக, வாசனை பொருந்திய வழித்
தடங்களில் எங்கும் நிறைந்து, எதிரெதிரே தமக்கு விருந்து செய்ய
அம்மூவரும் சென்றனர்.
'ஆல்' அசைநிலை.
11 |
பில்கித்
தீந்தேன் றுளிசுரக்கும் பிணையற் றிரளோர்
மாரியென
நல்கித் தீஞ்சொற் பாவிசைகள் நயப்பிற் பாடி மின்னினிறத்
தொல்கித் தீண்டிற் கண்கனிய வொளிசெய் தையா
யிரத்திரட்டி
மல்கிக் காத்த வும்பரலால் வந்தா ரன்றோ ரெண்ணலரே. |
|
பில்கித் தீம்
தேன் துளி சுரக்கும் பிணையல் திரள் ஓர் மாரி என
நல்கி, தீம் சொல் பா இசைகள் நயப்பின் பாடி, மின்னின் நிறத்து
ஒல்கி, தீண்டின் கண்கனிய ஒளி செய்து, ஐயாயிரத்து இரட்டி
மல்கிக் காத்த உம்பர் அலால், வந்தார் அன்று ஓர் எண் இலரே. |
பெருந்திரளாய்
எப்பொழுதும் காத்து நின்ற பதினாயிரம் வானவரும்
அல்லாமல், இனிய தேனைக் கொப்புளித்துத் துளித் துளியாகச் சுரக்கும்
மாலைத் திரளை மழை போல் பொழந்தும், இனிய சொல்லால் அமைந்த
பாடல்களைப் பல வகை இராகங்களில் நயமாகப் பாடியும், மின்னலின்
நிறத்தோடு குழைந்து, கண்கள் தீண்டினால் கனிவாகும்படி ஒளியைத்
தந்தும், அன்று ஓர் எண்ணிக்கைக்குள் அடங்காத வேறு வானவரும்
துணையாக வந்தனர்.
ஐயாயிரத்து இரட்டி
: 5000 * 2 = 10000
12 |
கற்பே
யணியென் றோம்பிமதுக் கரையாந் தண்டார் மாதர்கடம்
பொற்பே கணவர் தமக்கல்லாற் புறத்துப் பயனே பயவாப்போல்
வெற்பே யெழுஞ்செஞ் சுடர்நாண விண்ணோர் புடையின்
மொய்த்துற்ற
பற்பே ருருவிம் மூவரலாற் பலருங் காணா தோன்றினரே. |
|