கற்பே அணி என்று
ஓம்பி, மதுக் கரை ஆ தண் தார்
மாதர்கள் தம்
பொற்பே, கணவர் தமக்கு அல்லால், புறத்துப் பயனே
பயவாப் போல்,
வெற்பே எழும் செஞ்சுடர் நாண, விண்ணோர் புடையின்
மொய்த்து உற்ற
பல பேர் உரு, இம் மூவர் அலால், பலரும் காணா
தோன்றினரே. |
கற்பே தமக்கு
அணிகலன் என்று பேணி, தேனுக்குக் கரையாய்
அமைந்துள்ள குளிர்ந்த மாலையை அணிந்த மகளிர் தம் அழகெல்லாம்,
தத்தம் கணவருக்கே அல்லாமல், புறத்தவர்க்குப் பயன் தராத தன்மை
போல், மலையில் உதிக்கும் பகலவனும் நாணுமாறு, வானவர், சுற்றிலும்
திரண்டு காட்டிய பல திறப்பட்ட பெருமை வாய்ந்த உருவத்தை, இம்
மூவரேயல்லாமல், வேறுள்ள பலரும் காணாத தன்மையாய்த் தோன்றினர்.
தேனுக்குக் கரையாய் அமைதலாவது, தேனை உள்ளடக்கிக் கொள்ளுதல்.
சென்ற
வழியிற் கண்ட சிறப்பு
-விளம், -மா,
தேமா, -விளம், -மா, தேமா
13 |
குரவநீள்
வேலி கோலுங் குடங்கையுட் டுஞ்சித் தன்னைக்
கரவநீள் பசும்பூ நெற்றிக் கரும்புக ணிறுவி யூக்கி
விரவநீள் தலையின் வாழை விடுங்கனி நக்கித் தீங்கான்
பரவநீள் பலபூங் காவும் படுநெறி போயி னாரே. |
|
குரவம் நீள்
வேலி கோலும் குடங்கையுள் துஞ்சி, தன்னைக்
கரவ நீள் பசும் பூ நெற்றிக் கரும்புகள் நிறுவி ஊக்கி
விரவ நீள் தலையின் வாழை விடும் கனி நக்கி தீம் கான்
பரவ நீள் பல பூங்காவும் படு நெறி போயினாரே. |
கரும்புகள் பேரீச்ச
மரங்களை நீண்ட வேலியாக வளைந்துள்ள
குறுகிய இடத்தினுள் முதலில் அடங்கிக் கிடந்து, பின் அவ்விடத்தையே
மூடி மறைக்குமாறு தம் நீண்ட மெல்லிய பூக்களை நெற்றிக்கு மேல்
நிமிர்த்தி, மேலும் ஊக்கம் கொண்டு, இலைகள் விரவ நீண்ட தலையை
உடைய
|