வாழை ஈனும் கனிகளை
நக்கி, தம் இனிய மணம் எங்கும் பரவ விட்டு,
இவ்வாறு நீண்டு கிடந்த பல பூஞ்சோலைகளும் கொண்டுள்ள வழியில்
அம்மூவரும் போயினர்.
11 |
சண்பகப்
பூம்பந் தொத்த தனயனை யேந்திப் போய்த்தம்
பண்பகத் தனைய நீழல் படர்ந்துகான் படரப் பூத்து
விண்பகப் பாய்ந்த கொம்பர் விட்டுகண் டுலவ யூக
மொண்பகற் றகைத்த மேகத் துறைமருட் டிடும்வீழ் தேனே. |
|
சண்பகப் பூம்
பந்து ஒத்த தனயனை ஏந்திப் போய், தம்
பண்பு அகத்து அனைய நீழல் படர்ந்து, கான் படரப் பூத்து
விண் பகப் பாய்ந்த கொம்பர் விட்டு உகண்டு உலவ யூகம்,
ஒண் பகல் தகைத்த மேகத்து உறை மருட்டிடும் வீழ் தேனே. |
சண்பக மலர்ப்
பந்து போன்ற மகனை ஏந்திக் கொண்டு வழியே
போய், தம் உள்ளப் பண்பு போன்ற நிழலினிடையே அவர்கள் செல்கையில்,
மணம் பரவுமாறு பூத்து மேகத்தைப் பிளக்குமாறு பாய்ந்த கிளை விட்டுக்
கிளை தாவிக் குரங்குகள் உலாவுவதனால், அக்கிளைகளினின்று சொரிந்த
தேன் ஒளி பொருந்திய ஆதவனை மறைத்து நின்று மேகத்தினின்று
பொழிந்த மழைத் துளியோ என்று மயங்கச் செய்யும்.
நீழல் - 'நிழல்'
என்பதன் நீட்டல் விகாரம். கொம்பர் - 'கொம்பு'
என்பதன் கடைப் போலி.
15 |
மலைத்தளி
யிருபான் மல்கி மகரயா ழிசைகள் செய்ய
விலைத்தளி ரிரும்பூஞ் சோலை யிடத்திலிட் டேகிப் பின்னர்
கலைத்திரி பாகக் கோலிக் கதிர்மணி யருவி யார்ப்பச்
சிலைத்திரி சிகிக ளாடுந் திகிரியி னலத்தைக் கண்டார். |
|
மலைத்து அளி
இரு பால் மல்கி யாழ் இசைகள் செய்ய,
இலைத் தளிர் இரும் பூஞ் சோலை இடத்தில் இட்டு ஏகி, பின்னர்,
கலைத் திரிபு ஆகக் கோலிக் கதிர் மணி அருவி ஆர்ப்ப,
சிலைத்து இரி சிகிகள் ஆடும் திகிரியின் நலத்தைக் கண்டார். |
|