17 |
காலடி
கோடி யாய கொடுமையால் வருட மூன்றும்
மேலடி மழையு மின்றி மெலிந்துல கெஞ்சி நிற்பக்
காலடி தன்மைத் தோர்கார் காணத்தன் கோட்டிற் றந்தே
யாலடி நிழற்றும் பொச்சை யன்றுயிர் தந்த தென்றான் |
|
"கோல் அடி கோடி
ஆய கொடுமையால், வருடம் மூன்றும்,
மேல் அடி மழையும் அன்றி மெலிந்து உலகு எஞ்சி நிற்ப,
கால் அடி தன்மைத்து ஓர் கார் காணத் தன் கோட்டில்
தந்தே,
ஆல் அடி நிழற்றும் பொச்சை, அன்று உயிர் தந்தது"
என்றான். |
"செங்கோல்
முறை அடியோடு கோணி நாட்டில் ஏற்பட்ட
கொடுமைகளின் விளைவாக, மூன்று ஆண்டுகளாய், மேலே இருந்து
பொழியும் மழையே இல்லாமல் உலகம் மெலிந்து தளர்ந்து நின்றபோது,
ஆலமரம் தன் அடியிலே நிழல் தந்து நிற்கும் இம்மலை, காலின் அடித்
தடித்து அளவான ஒரு மேகத்தைத் தன் உச்சியில் காணத் தந்து,
அந்நாளில் உயிர்களை யெல்லாம் காத்தது" என்றான்.
18 |
நூல்வழிப்
புகழே போன்று நொடிப்பினிற் பரந்த மேகம்
வேல்வழி யொளியே போன்று மின்னியார்த் திறைவ னன்பின்
பால்வழிப் பயனே போன்று பகலிரா வளவி றூவிக்
கோல்வழிப் படமே போன்று கூவெலாங் கேழ்த்த தென்றான் |
|
"நூல் வழிப்
புகழே போன்று நொடிப்பினில் பரந்த மேகம்,
வேல் வழி ஒளியே போன்று மின்னி, ஆர்த்து, இறைவன் அன்பின்
பால் வழிப் பயனே போன்று பகல் இரா அளவ இல் தூவி,
கோல் வழிப் படமே போன்று கூ எலாம் கேழ்த்தது" என்றான். |
"நூலின் வழியே
புகழ் பரவுவது போன்று, ஒரு நொடிப் பொழுதில்
விரிந்து எங்கும் பரந்த அம்மேகம், வேலினின்னு வெளிப்படும் ஒளியைப்
போல் மின்னி, முழங்கி, ஆண்டவனின் அன்பாகிய பாலின் வழியாக |