நிறை தவிர்ந்து
உணர்ந்த காம நெறியில் கைப் பொருயே
போன்றும்
முறை தவிர்ந்து அடை சீர் போன்றும், முனிகள் தம் முனிவு
போன்றும்,
பொறை தவிர்ந்து இழிந்து ஈண்டு ஓடும் புனல் நலம் எதிர்
கொண்டு, ஆங்கு அத்
துறை தவிர்ந்து, இடத்து இட்டு ஏகி, துளித்த தேன் முல்லை
சேர்ந்தார். |
நிறையைக் கடைப்பிடிக்காமல்
ஒருவன் கருதிய காம நெறியினால்
தன் கைப்பொருள் விரைவில் மறைவது போன்றும், முறை கெட்ட வழியில்
ஒருவன் அடைந்த செல்வம் ஓடிமறைவது போன்றும், முனிவர்கள் கொண்ட
சினம் விரைவில் நீங்குவது போன்றும், மலையைவிட்டு இந்நலத்தில் இறங்கி
ஓடும் வெள்ளத்தின் நலத்தைக் கண்டு, உடனே அந்நீர்த் துறையில் நெடிது
நிற்றல் தவிர்ந்து, அதனை இடப் பக்கமாக இட்டுச் சென்று, பொழிந்த
தேனைக் கொண்ட முல்லை நிலத்தை அடைந்தனர்.
'நிறை' பற்றிய
விளக்கம் 7 : 80 காண்க: இங்கு முனிகள் என்றது
'பிடி சாபம்!' என்று தம் தவ வலிமையால் பிறருக்கு ஊறு செய்யும் புராண
முனிவர்களைப் போலாது, குணமென்னும் குன்று ஏறி நின்று, எழுந்த
சினத்தைக் கணப் பொழுதும் தம் பால் தங்கவிடாது போக்கும் அருள்
முனிவரை என அறிக. "குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி,
கணமேயுங் காத்தல் அரிது" என்ற குறள் (29) குறிக்கும் உண்மைப்
பொருளை உணர்ந்து, பிறர்க்கும் உணர்த்தும் நோக்கத்தோடு வீரமாமுனிவர்
இங்கே கொண்டு கூறியுள்ளார். சாதாரணர் போல், வெகுளிக்குப்
போக்கிடமாகச் சாபத்தைப் பயன் படுத்துவோர், 'குணம் என்னும் குன்று
ஏறி நின்றார்' ஆதல் யாங்ஙனம்? 'சேர்ந்தாரைக் கொல்லி அன்றோ சினம்?
வினையின்
விளைவு - ஒரு கதை
23 |
நீழ்கிளர்
மலரின் றண்பூ நிழல்கிளர் கொம்பிற் புல்லிக்
கேழ்கிளர் பொறித்த மாமைக் கெழுஞ்சிறை வகிர்ந்து பேணி
வாழ்கிள ரன்பி னாலு மணிக்கிளர் வனப்பி னாலுஞ்
சூழ்கிளர் காவி லொவ்வாத் துணைப்புற விருந்த தம்மா. |
|