நீழ் கிளர்
மலரின் தண் பூ நிழல் கிளர் கொம்பில் புல்லி.
கேழ் கிளர் பொறித்த மாமைக் கெழுஞ் சிறை வகிர்ந்து
பேணி
வாழ் கிளர் அன்பினாலும், மணிக் கிளர் வனப்பினாலும்,
சூழ் கிளர் காவில் ஒவ்வாத் துணைப் புறவு இருந்தது,
அம்மா! |
ஒளி கிளர்ந்து
எழும் அழகைப் பொறித்து வைத்தது போன்ற செறிந்த
சிறகுகளை அலகினால் கோதி ஒன்றையொன்று பேணி வாழும் மிகுந்த
அன்பினாலும், மணி் போல் கிளர்ந்து எழும் உருவ அழகினாலும், சுற்றிலும்
உயர்ந்து நின்ற அச் சோலை எங்கும் தனக்கு நிகர் இல்லாத புறாச் சோடி
ஒன்று, நெடிதாய் எழுந்து நின்று மலர்களின் குளிர்ந்த அழகிய நிழல்
செறிந்த மரக் கொம்பில் நெருங்கப் பொருந்தி இருந்தது.
'இருந்தது'
என்ற ஒருமைப் பயனிலைக்குப் பொருந்த, 'துணைப்
புறவு' என்பதனைப் 'புறவுத் துணை' என மாற்றி, 'புறாச் சோடி' என்ற
பொருள் கொள்க. 'நீள்' என்பது எதுகை நோக்கி 'நீழ்' எனத் திரிந்தது.
அம்மா - வியப்பிடைச் சொல் 'கேள்' என்ற குறிப்புப் பொருள்
உடையது. "அம்ம கேட்பிக்கும்" (தொல். இடை. 28).
24 |
உலைவள
ரெரிச்செங் கண்ணா னூனெயிற் றூற்று வாயான்
கொலைவளர் புலிப்பா லுண்டு கொலையொடு வளர்ந்த வேட
னிரைவளர் நிழற்பூங் காவி லெய்தியப் பறவை கண்டே
சிலைவளர் கொலையீண் டுள்ளிச் சிலைவளைத் தணுகிச்
சேர்ந்தான். |
|
உலை வளர் எரிச்
செங் கண்ணான், ஊன் எயிற்று ஊற்று
வாயான்,
கொலை வளர் புலிப் பால் உண்டு கொலையொடு வளர்ந்த
வேடன்,
இலை வளர் நிழல் பூங்காவில் எய்தி, அப் பறவை கண்டே,
சிலை வளர் கொலை ஈண்டு உள்ளி, சிலை வளைத்து அணுகிச்
சேர்ந்தான். |
உலையில்
மூண்டெரியும் நெருப்புப் போல் சிவந்த கண்களை
உடையவனும், தான் உண்ட ஊனைப் பற்களினின்று சொரியவிடும் வாயை
உடையவனும், கொலைத் தன்மை இயல்பாக வளரும் புலியின் பால்
உண்டு அக் கொலைத் தன்மையில் ஊறி வளர்ந்தவனுமாகிய ஒரு வேடன்,
இலைகளின் செறிவால் வளர்ந்த நிழலுள்ள அப் பூஞ்சோலையை அடைந்த,
|