பக்கம் எண் :

முதற் காண்டம்730

அப்பறவைச் சோடியைக் கண்டதுமே, வில்லினால் வளர்க்கும் கொலையை
இங்கும் கருதி, வில்லை வளைத்த வண்ணமாய் அணுகிச் சேர்ந்தான்.
 
                     25
ஓர்பகை யிவன்கீ ழுள்ள வுலவிமேற் பருந்து தானுங்
கூர்பகை யுகிர்வவ் வாமுற் கொடியகண் ணிரையை வவ்விப்
பேர்பகை யுணர்ந்து சூழப் பிறரெலாந் தமைப்போ லெண்ணிச்
சேர்பகை யுணரா வப்புட் சிறுமைகண் டினைந்தான் சூசை.
 
ஓர் பகை இவன் கீழ் உள்ள, உலவி மேல் பருந்து தானும்
கூர் பகை உகிர் வவ்வாமுன் கொடிய கண் இரையை வவ்வி,
பேர் பகை உணர்ந்து சூழ, பிறர் எலாம் தமைப் போல், எண்ணி,
சேர் பகை உணரா அப் புள் சிறுமை கண்டு இனைந்தான் சூசை.

     இவன் கீழே நின்று ஒரு பகைச் செயலைக் கருதிக் கொண்டிருக்க,
ஒரு பருந்து தானும் மேலே வானத்தில் உலாவி, திக்க பகையால் தன்
நகத்தால் பற்றிக் கவர்ந்து கொள்வதற்கு முன்னே கொடிய கண்ணால்
அந்த இரையைக் கவர்ந்து கொண்ட தன்மையாக, பெரியதொரு பகைச்
செயலைக் கருதி வட்டமிட்டுக் கொண்டிருக்க, பிறரையெல்லாம் தம்மைப்
போல் கபடற்றவராக எண்ணி, தம்மைச் சேரவிருந்த பகையை உணராத
அப்புறாக்களுக்கு நேரக்கூடிய துன்பத்தைக் கண்டுணர்ந்து சூசை
வருந்தினான்.
 
                      26
சிட்டமிட் டெழுதப் பட்ட சிறகொளி செருப்பப் பாறும்
வட்டமிட் டிழிந்து பாய வருகையில் வேடன் வாளிச்
சட்டமிட் டெய்யச் சர்ப்பந் தனைமிதித் திடுங்கா றீண்டித்
தட்டமிட் டவனு மாய்ந்தான் றவிர்ந்தகோல் பருந்துங் கொய்தே.
 
சிட்டம் இட்டு எழுதப்பட்ட சிறகு ஒளி செகுப்ப, பாறும்
வட்டம் இட்டு இழிந்து பாய வருகையில், வேடன் வாளிச்
சட்டம் இட்டு எய்ய, சர்ப்பம் தனை மிதித்திடும் கால் தீண்டித்
தட்டம் இட்டு அவனும் மாய்த்தான், தவிர்ந்த கோல் பருந்தும்                                              கொய்தே.