புதுப் பட வேந்து
உறீஇ, பொலி தெருத் தொறும்
சதுப் பட, நகர் எலாம் சிறந்த தன்மை போல்,
விதுப் பட முகத்து வான் வேந்தன் எய்தலால்,
மதுப் பட மலர்ந்தன முல்லை வாய் எலாம். |
புதிதாக அரசன்
வரவே, பொலிவுள்ள தெரு ஒவ்வொன்றும்
அழகுபடுத்தப் படுதலினால் நகரம் முழுவரும் சிறந்து விளங்கிய தன்மை
போல், மதியும் தோற்கும் படியான முகங்கொண்ட வானுலக அரசனாகிய
குழந்தை நாதன் அங்கு வந்தடைந்தமையால், அம் முல்லைநிலத்து
இடங்களெல்லாம் தேனை உட்கொண்டு மலர்ந்து தோன்றின.
'சதுப் பட' என்ற
விடத்து, அழகைக் குறிக்கும் 'சதுர்' என்ற சொல்,
கடைக்குறையாக நின்றது.
| 29 |
வானகத் தகவினோர் மகிழ வேய்ந்தென
மீனகத் தருவெலா முகைகள் விள்ளலே
கானகத் தவத்தினோன் மனத்திற் கானொடு
தேனகத் தலர்ந்தகோற் சிறப்புக் காட்டுமே. |
| |
வானகத்
தகவினோர் மகிழ வேய்ந்து என,
மீன்
நகத் தரு எலாம் முகைகள் விள்ளலே,
கானகத் தவத்தினோன் மணத்தில் கானொடு
தேன் அகத்து அலர்ந்த கோல் சிறப்புக் காட்டுமே. |
வானுலகிற்குரிய
பெருமை வாய்ந்த இம் மூவரும் மகிழுமாறு தம்மை
அழகு செய்து கொண்டாற் போல, மரங்களெல்லாம் விண்மீன்கள் போலத்
தம் மொட்டுக்களை விரித்து மலர்ந்து நிற்கும் தோற்றம், காட்டில் செய்யும்
தவத்திற்கு உரியவனாகிய சூசையின் திருமண நாளில் மணத்தோடு தேனைத்
தன்னுள் கொண்டு மலர்ந்த கோலின் சிறப்பைக் காட்டும்.
| 30 |
சென்னியா
ரிளமது திருந்தும் பூமலர்
துன்னியார் நறவிய கனிக டோற்றமு
மின்னியா ருடுமுடி வேய்ந்த நாயகி
கன்னியாய் மகற்பெறு மாட்சி காட்டுமே. |
|