சென்னி ஆர்
இள மது திருந்தும் பூ மலர்
துன்னி ஆர் நறவிய கனிகள் தோற்றமும்,
மின்னி ஆர் உடு முடி வேய்ந்த நாயகி
கன்னியாய் மகன் பெறு மாட்சி காட்டுமே. |
மரங்களின்
உச்சியில் நிறைந்த புதுத் தேன் பொருந்தும் பூத்த
மலர்களோடு செறிந்து நிறைந்த மணமுள்ள கனிகளின் தோற்றமும் மின்னி
நிறைந்த விண்மீன்களை முடியாக அணிந்த நாயகியாகிய மரியாள்
கன்னியாய் இருந்தே மகனைப் பெற்ற மாட்சியை எடுத்துக்காட்டும்.
| 31 |
பருவிலார் மனமென முகில்ப பரந்துநூற்
கருவிலார் மனமெனக் கருக வந்தரந்
திருவிலார் மனமெனத் தேம்ப மாங்குயில்
மருவிலார் மனமென மஞ்ஞை யாடுமால். |
| |
பரு இலார்
மனம் என முகில் பரந்து, நூல்
கரு
இலார் மனம் எனக் கருக அந்தரம்,
திரு இலார் மனம் எனத் தேம்ப மாங்குயில்,
மருவு இலார் மனம் என மஞ்ஞை ஆடும் ஆல். |
பக்குவம் இல்லாதவர்
மனம்போல மேகங்கள் நிலை கொள்ளாமல்
பரந்து, நூலறிவின் அடிப்படை இல்லாதவர் மனம் போல வானம்
கறுத்துத் தோன்ற, மா மரத்துக் குயில்கள் செல்வம் அற்றவர் மனம்
போலப் புலம்ப, பொருந்துதல் இல்லாத பகைவர் மனம் போல மயில்கள்
மகிழ்ந்து ஆடும்.
'ஆல்' அசைநிலை.
'பருவம்' என்பது கடைக்குறையாகப் 'பரு' என்
நின்றது. மழையைக் கண்டு மயில் ஆடுவதும் குயில் வாடுவதும் இயற்கை.
குரல் இளிமை கொண்ட குயிலின் மீது அவ்வினிமை இல்லாத மயிலுக்குப்
பகை சார்த்திக் கூறியதாக இதனைக் கொள்க.
| 32 |
ஏர்முகம்
புதைத்தவில் லிவர்செய் தெய்தலாற்
கார்முகம் புதைத்தவெங் கதிரு தித்ததென்
றார்முகம் புதைத்தவின் பருந்திக் கூய்க்குயில்
சூர்முகம் புதைத்தன தோகை நாணியே. |
|