பக்கம் எண் :

முதற் காண்டம்736

ஆயரும் உலவு தீம் குழலின் ஆர்ப்பு எழ,
ஆய் அரும் உறவினோடு ஆவும் மானும் ஒன்
றாய், அரும் அறிவு என அமர்ந்து நோக்கலின்,
ஆயரும் மறந்த ன்று அடி தொடர்ந்தவே.

     இடையரும் காற்று ஊதி உலாவவிடும் இனிய புல்லாங்குழலின்
ஓசையை எழுப்பவே, ஆராய்வதற்கரிய ஓர் உறவோடு பசுக்களும்
மான்களும் ஒன்றாகக்கூடி, அரியதோர் அறிவைப் பெற்றன போல்
இம்மூவரையும் பதிய நோக்கி நிற்றலால், கன்றுகள் தம் தாய்மாரையும்
மறந்து இம்மூவர் அடியைத் தொடர்ந்து சென்றன.

     'காற்று' என்பது, முன் பாடலில் 'வளி' என வந்ததனைக்
கொண்டுகூட்டி வருவிக்கப்பட்டது. கன்றுகளின் தாய்களை 'ஆயர்' என
உயர்திணையாய் முடித்தது, "இன்னே வருகுவர், தாயர் என்போள்' என்ற
(முல்லைப் பாட்டு, 16) இடத்துப் போல, உயர்வு பற்றி வந்த திணை
வழுவமைதி.
 
               37
அம்புகை வில்லென வடிவ ணங்கின
வம்புகைத் துகிலென வலர்ந்த பூந்தரு
வம்புகை முளரிகொண் டடிவ ணங்கின
வம்புகை யொலியென வார்ப்பே வண்டரோ.
 
அம்பு உகை வில் என அடி வணங்கின,
அம் புகைத் துகில் என அலர்ந்த பூந் தரு;
அம்பு கை முளரி கொண்டு அடி வணங்கின,
அம்பு கை ஒலி என ஆர்ப்ப வண்டு அரோ.

     அழகிய புகையூட்டப் பெற்ற ஆடை போல் மலர்ந்து நின்ற பூக்களால்
நிறைந்த மரங்கள், அம்பை உந்தித் தள்ளும் வில்லைப் போல வளைந்து
இம்மூவர் அடிகளை வணங்கின. மேகத்திடத்துப் பிறந்த ஒலி போல
வண்டுகள் முழங்க, தடாகங்கள் தம் கையாகிய தாமரை மொட்டுக்களைக்
கொண்டு இம்மூவர் அடிகளை வணங்கின.

     'அம்பு' என்ற நீரின் பெயர் தடாகத்திற்கு ஆகுபெயர் 'அரோ'
அசைநிலை.