| 42 |
சிந்துரம் விழித்தெனச் சினைத்த பாடலஞ்
சிந்துர முகைமணித் துகளிற் றீர்ந்தன
சிந்துர மணந்த நீர்க் குளித்த சீர்மைபோற்
சிந்துர மணத்தொடு முகைத்த சீலமே. |
| |
சிந்துரம்
விழித்து எனச் சினைத்த பாடலம்.
சிந்துர
முகை மணித் துகளின் தீர்ந்தன.
சிந்துரம்
மணந்த நீர்க் குளித்த சீர்மை போல்,
சிந்துரம்
மணத்தொடு முகைத்த சீலமே. |
யானை விழித்துப்
பார்ப்பது போல் பாதிரி மரங்கள் அரும்பெடுத்தன.
புளிய மரத்தின் மொட்டுகள் மாணிக்கப் பொடி போல் மூடி நின்றன.
சிந்துரப் பொடி கலந்த நீரில் குளித்த சிறப்புப் போல, வெட்சி மரங்கள்
வரிசையாக மணத்தோடு கூடிய மொட்டுகளைத் தாங்கி நின்றன.
| 43 |
மீன்பரப் பெனமுகை விண்ட மற்றையும்
வான்பரப் பெனவிரி வனத்தி லெங்கணுந்
தேன்பரப் பெனக்குளிர் செலவைச் சென்றுசெல்
கான்பரப் பனைத்தையும் கடந்து போயினார். |
| |
மீன்
பரப்பு என முகை விண்ட மற்றையும்
வான்
பரப்பு என விரி வனத்தில், எங்கணும்
தேன்
பரப்பு எனக்குளிர் செலவைச் சென்று, செல்
கான்
பரப்பு அனைத்தையும் கடந்து போயினார். |
விண்மீன்களின்
பரப்புப் போல மொட்டுகள் மலர்ந்த மற்ற மரங்களும்
வானத்தின் பரப்புப் போலப் பரந்து நின்ற அவ்வனத்தில், தேனைப்
பரப்பினாற் போன்று குளிர்ச்சியான வழியில் எங்கும் நடந்து சென்று,
மேலும் நீண்டு சென்று கொண்டிருந்த முல்லை நிலப் பரப்பு முழுவதையும்
அம்மூவரும் கடந்து போயினர்.
|