| பாவத்தினின்று மீட்டு
விளங்கச்செய்வதற்கென்று அவதரித்து வந்த
ஆண்டவனை வானவர் புகழ்ந்து, வாழொலியை விளங்கச் செய்யும்
பாடல்களைப் பாடி வர, இம்மூவரும் போய் மருத நிலத்தை அடைந்தனர்.
| 46 |
ஆறு பாயொலி யடற்றகர் பாயொலி நெறிக்கொம்
பேறு பாயொலி எருமைநீர் பாயொலி கரும்பின்
சாறு பாயொலி சங்கொலி வயிரொலி மற்ற
மாறு பாயொலி மயக்குறீஇ யெதிர் கொண்டார்த் தனவே. |
| |
ஆறு பாய் ஒலி,
அடல் தகர் பாய் ஒலி, நெறிக் கொம்பு
ஏறு பாய் ஒலி, எருமை நீர் பாய் ஒலி, கரும்பின்
சாறு பாய் ஒலி, சங்கு ஒலி, வயிர் ஒலி, மற்ற
மாறு பாய் ஒலி மயக்கு உறீஇ எதிர் கொண்டு ஆர்த்தனவே. |
ஆறு பாயும் ஓசையும்,
வலிமை வாய்ந்த ஆட்டுக் கிடாய்கள்
ஒன்றோடொன்று மோதும் ஓசையும், நிமிர்ந்த கொம்புள்ள எருதுகள்
மோதும் ஓசையும், எருமைகள் நீரில் பாயும் ஓசையும், ஆலையில்
கருப்பஞ்சாறு பாயும் ஓசையும், சங்கின் ஓசையும், ஊதுகொம்பின் ஓசையும்,
மற்றும் மாறுபடப்
பாய்ந்து வரும் பல ஓசைகளும் தம்முள் மயங்கி,
இம்மூவரையும் எதிர்கொண்ட தன்மையாய் முழங்கின.
| 47 |
உறைசெய் காரணி யுயர்மலை முலைபொழி பாலாய்
நறைசெய் தேனொடு நனிமலி புனல்வயல் பாயச்
சிறைசெய் காலது சிலைத்தலே யிவரடி சேர்ந்தோர்
குறைசெய் நோயறக் கூவுபு கூப்பிடல் போன்றே. |
| |
உறை
செய் கார் அணி உயர் மலை முலை பொழி பாலாய்,
நறை
செய் தேனொடு நனி மலி புனல் வயல் பாயச்
சிறை செய் கால் அது சிலைத்தலே இவர் அடி சேர்ந்தோர்
குறை செய் நோய் அறக் கூவுபு கூப்பிடல் போன்றே. |
மழையைத் தரும் கருமேகத்தை
அணிந்துள்ள உயர்ந்த மலையாகிய
முலை பொழியும் பால் போல, வாசனை பொருந்தியதனோடு மிகுதியாகப்
பெருக்கெடுத்து வரும் நீரை வயலுக்குப் பாயும்படி மறிக்கும்போது அது
இரைவது, இவர்தம் அடியைச் சரணாக அடைந்தோர் தமக்குக் குறை
வருவிக்கும் துன்பங்கள் நீங்குமாறு இவரைக் கூவி அழைப்பது போன்று
தோன்றும். |