பக்கம் எண் :

முதற் காண்டம்742

     'தோன்றும்' என ஒரு சொல் வருவித்து முடிக்கப்பட்டது. தொடர்ந்து
வரும் இரு பாடல்களுக்கும் இது பொருந்தும்.

                 48
நடிப்ப நாண்மலர் நறும்புனற் றடத்திலாங் குழுந
ரிடிப்ப நீனிறத் துழும்பக டுரப்பலா லெழுமீன்
றுடிப்ப வாமைக டூம்பிடைத் தலைசுரித் தொளித்த
லுடிப்ப மூவரே யுலகிட ரொளிக்குவ போன்றே.
 

நடிப்ப நாள் மலர், நறும் புனல் தடத்தில், ஆங்கு, உழுநர்
இடிப்ப நீல் நிறத்து உழும் பகடு உரப்பலால், எழு மீன்
துடிப்ப, ஆமைகள் தூம்பு இடைத்தலை சுரித்து ஒளித்தல்,
உடிப்ப மூவரே உலகு இடர் ஒளிக்குவ போன்றே.

     அங்கு உழவர் நல்ல நீருள்ள குளத்தில் படிந்த கரு நிறம் கொண்ட
உழுவதற்கான எருமைக் கடாவை இடித்தும் அதட்டியும் எழுப்புவதனால்,
புதிய மலர்கள் அசைந்து ஆடவும், துள்ளிய மீன் கரையில் விழுந்து
துடிக்கவும், ஆமைகள் தம் தலையை உள்ளே சுருக்கிக் கொண்டு
மடைக்குள் ஒளித்துக் கொண்டிருப்பது, இம்மூவர் வரவே உலகத்துத்
துன்பங்களெல்லாம் போய் ஒளிந்து கொள்வதுபோல் தோன்றும்.

 
                 49
கேழ்த்த பூவயல் கிழிபடக் சிலரவண் கீறி
வீழ்த்த தாமரை மெலிவோடு வரம்பின்மேல் வாடல்
நீழ்த்த மாண்பிவர் நிழலடி வணங்கிலா நீக்கி
வாழ்த்த மாண்பிலர் வருந்தியுள் வாடுவர் போன்றே.
 
கேழ்த்த பூ வயல் கிழிபடச் சிலர் அவண் கீறி
வீழ்த்த தாமரை மெலிவோடு வரம்பின் மேல் வாடல்,
நீழ்த்த மாண்பு இவர் நிழல் அடி, வணங்கு இலா நீக்கி,
வாழ்த்த மாண்பு இலர், வருந்தி உள் வாடுவ போன்றே.