|
அங்கு நிறமுள்ள
பூக்களைக் கொண்ட வயலைச் சிலர் கிழிபட
உழுது, அதனால் வீழ்த்தப்பட்ட தாமரை வரப்பின் மேல் மெலிவோடு
வாடிக் கொண்டிருப்பது, நீடித்த மாண்பு கொண்ட இம் மூவரின் குளிர்
நிழல் போன்ற அடிகளை வணங்காமல் விலக்கியதோடு, வாழ்த்துவதற்கு
உரிய மாண்பும் இல்லாதவர், உள்ளம் வருந்தி வாடுவதுபோல் தோன்றும்.
நீழ்த்த - 'நீள்'
என்ற சொல், எதுகை நோக்கி, 'நீழ்' எனத் திரிந்து,
இறந்த காலப் பெயரெச்சமாய் இவ்வாறு நின்றது.
| 50 |
புரிந்த வோகையிற் பொருவிலா விவரருட் போன்று
பிரிந்த மேதிதன் பிள்ளையை யுள்ளலிற் கனைந்து
சொரிந்த பாலுண்டு துஞ்சிய வோதிமம் வெருவி
யிரிந்த தாகவார்த் தெழுகென வித்தினர் சிலரே. |
| |
புரிந்த ஓகையில்
பொருவு இலா இவர் அருள் போன்று,
பிரிந்த மேதி தன் பிள்ளையை உள்ளலின் கனைந்து
சொரிந்த பால் உண்டு துஞ்சிய ஓதிமம் வெருவி
இரிந்தது ஆக, ஆர்த்து, "எழுக!" என வித்தினர் சிலரே. |
இம்மூவரும்
மகிழ்ச்சியோடு நமக்குப் புரிந்து வருகின்ற
பெருங்கருணையைப் போன்று, பிரிந்து வந்த எருமை தன் கன்றை
நினைவுகூர்தலால் கனைத்துச் சொரிந்த பாலை உண்டு உறங்கிக்
கொண்டிருந்த அன்னம் அஞ்சி அகன்று போகுமாறு, சிலர், "எழுந்து
தழைப்பாயாக!" என்று முழங்கி விதைகளை விதைத்தனர்.
எழுக + என -
'எழுகவென' எனற் பாலது, 'எழுகென' என நின்றது
தொகுத்தல் விகாரம்.
| 51 |
இங்கண் பாவியாப் பிசைபயன் விரித்துரைத் தென்ன
வங்கண் மாதர்கட் டவிழ்த்துச்செந் நென்முடி நடுவார்
திங்க ணாண்முகத் திவர்க்கிணை யலவெனச் சினந்தே
யங்க ணாம்பலோ டலரெலாங் களையெனப் பறிப்பார். |
|