| 55 |
மாரி மல்கிய மதிதொறு மும்மழை பெய்ய
வேரி மல்கிய விளைபுலத் தெனைப்பக றோலும்
பூரி மல்கிய தொழிலெலாம் பொருந்தியம் மூவர்
சீரின் மல்கிய செல்வநாட் டலர்ப்பனை கடந்தார். |
| |
மாரி மல்கிய
மதி தொறும் மும் மழை பெய்ய,
வேரி மல்கிய விளை புலத்து எனைப் பகல் தோறும்
பூரி மல்கிய தொழில் எலாம் பொருந்தி, அம்மூவர்
சீரின் மல்கிய செல்வ நாட்டு அலர்ப் பணை கடந்தார். |
மழைவளம் பெருகுமாறு
மாதந்தோறும் மூன்று மழை பெய்யவும்,
மலர்களின் தேன் நிறைந்த விளைநிலத்தில் எல்லா நாட்களிலும் செல்வம்
பெருகுமாறு மேலே காட்டிய தொழில்களெல்லாம் பொருந்தவும் செய்து,
அம்மூவரும் சிறப்பு நிறைந்த அச்செல்வ நாட்டின் மலர் நிறைந்த
வயல்களைக் கடந்து சென்றனர்.
'மல்கிய' என்பது,
முதலடியிலும் மூன்றாமடியிலும், 'பெருகுமாறு'
எனப் பொருள்படும் 'செய்யிய' என்னும் வாய்பாட்டு வினையெச்சம்;
இரண்டாமடியிலும் நான்காமடியிலும் 'பெருகிய நிறைந்த' எனப்
பொருள்படும் 'செய்த' என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம், 'எனைப் பகல்
தோறும்' என்ற விடத்து, 'தோறு' என்பது வேண்டாது நின்றது: 'எனைப்
பகலும்', அல்லது 'பகல் தோறும்' என்பதே சாலும், 'எனை' என்பதையும்
'தோறு' என்பதையும் இணைத்துக் கூறுவது முனிவர் மரபு.
| 56 |
காரி வாயென நிறுவிய கழுகுயர் காவு
நாரி வாயென நனிநரல் தெங்கெழுங் காவு
பூரி வாய்வளை புலவர்போ லரம்பையின் காவும்
வேரி வாய்மலர்க் காவுநீத் தணிநகர் மிடைந்தார். |
| |
காரி வாய் என
நிறுவிய கழுகு உயர் காவும்,
நாரி வாய் என நனி நரல் தெங்கு எழும் காவும்,
பூரி வாய் வளை புலவர் போல் அரம்பையின் காவும்,
வேரி வாய் மலர்க் காவும் நீத்து, அணி நகர் மிடைந்தார். |
|