|
கீழ் மக்களின்
வாய் போல மிகவும் சலசலக்கும் தென்னை மரங்கள்
ஓங்கிய தோப்புகளும், செல்வம் வாய்த்தவிடத்துப் பணிவு காட்டும்
அறிவுடையோர் போலக் குலை சாய்ந்த வாழைத் தோட்டங்குள்ம, தேன்
வாய்ந்த மலர்ச் சோலைகளும் கடந்து, மூவரும் அழகிய எருசலேம்
நகரை நெருங்கினர்.
| 57 |
விருந்தி னார்முகம் விரும்பினர் கண்டென மலர்ந்து
வருந்தி னார்முகங் கண்டழு நீரென மதுப்பெய்
தருந்தி னார்முகந் தவாவறக் கனிமலி காவிற்
பொருந்தி னார்முகம் பொலிநகர்ப் புரிசையைக் கண்டார். |
| |
விருந்தினார்
முகம் விரும்பினர் கண்டு என மலர்ந்து,
வருந்தினார் முகம் கண்டு அழுநீர் என மதுப் பெய்து,
அருந்தினார் முகந்து அவா அறக் கனி மலி காவில்
பொருந்தினார்; முகம் பொலி நகர்ப் புரிசையைக் கண்டார். |
விருந்தினரை
விரும்பும் இயல்புடையோர் அவர் முகத்தைக் கண்டு
மலர்ந்த தன்மை போல் மலர்கள் பூத்தும், வருந்தியவர் முகத்தைக் கண்டு
அழும் தன்மை போல் தேனைப் பொழிந்தும், பறித்து அருந்தியவர் ஆசை
தீருமளவான கனிகள் மிகுந்தும் அமைந்த ஒரு சோலையை மூவரும்
வந்தடைந்தனர்; தனக்கு முகம் போல் விளங்கும் அந்நகரத்து மதிலை
அங்கிருந்தே கண்டனர்.
எருசலேம்
சேர்ந்து கோவிலை அடைதல்
-விளம், -மா,
விளம், -மா, -விளம், -விளம், -மா
| 58 |
மின்னிய
முகில்சூழ் பொன்மலை தழுவி வேய்ந்தென
விசும்பினைத் தாவுங்
கன்னிய புரிசை சூழ்தரத் தோன்றிக் கசடுறு மெரோதனென்
றரசன்
றுன்னிய கொடுங்கோல் துயர்செய வுளைந்து தொன்மறை
வழுவில காத்து
மன்னிய வளங்கொள் ளெருசலே மென்னு மாநகர்
தோன்றிய தன்றே. |
|