பக்கம் எண் :

முதற் காண்டம்748

மின்னிய முகில் சூழ் பொன் மலை தழுவி வேய்ந்து என,
                            விசும்பினைத் தாவும்
கன்னிய புரிசை சூழ் தரத் தோன்றி, கசடு உறும் எரோதன்
                            என்ற அரசன்
துன்னிய கொடுங் கோல் துயர் செய உளைந்து, தொள்
                            மறை வழு இல காத்து,
மன்னிய வளம் கொள் எருசலேம் என்னும் மாநகர்
                            தோன்றியது அன்றே.

     மின்னிய மேகங்கள் சூழ்ந்த பொன் மலையைத் தழுவி அழகு
செய்தது போல, ஆகாயத்தை அளாவும் அழியாத மதில் சுற்றிலும் அமையத்
தோன்றி, குற்றங்கள் நிறைந்த எரோதன் என்ற அரசன் அடுத்திருந்து செய்த
கொடுங்கோன்மை துயரம் தந்ததனால் வருந்தி, பழமையான வேத நெறியைத்
தவறில்லாமல் காத்து, நிலைபெற்ற வளங்களைக் கொண்டுள்ள எருசலேம்
என்னும் பெரிய நகரம் இப்பொழுது தெளிவாகத் தோன்றியது.

     'அன்றே' அசைநிலை.

                     59
அல்லுமி ழிருளி னிருண்டநெஞ் சவன்செய் யரந்தையின்
                                வெவ்வழ லாற்ற
வில்லுமிழ் பசும்பொன் மாடங்க ணெற்றி விரித்தபூங்
                                கொடிகடம் மீட்ட
மெல்லுமிழ் மூவர் வருகைகண் டரச னியற்றிய வஞ்சனைக்
                                    கஞ்சி
நில்லுமி னின்மி னெனவிடை விடாது நீண்டகை காட்டுவ
                                    போன்றே.
 
அல் உமிழ் இருளின் இருண்ட நெஞ்சு அவன் செய்
                        அரந்தையின் வெவ் அழல் ஆற்ற
வில் உமிழ் பசும் பொன் மாடங்கள் நெற்றி விரித்த பூங்
                        கொடிகள் தம் ஈட்டம்,
எல் உமிழ் மூவர் வருகை கண்டு, அரசன் இயற்றிய
                        வஞ்சனைக்கு அஞ்சி,
"நில்லுமின்" நின்மின்!" என இடை விடாது நீண்ட கை காட்டுவ
                        போன்றே.

     இரவு தரும் இருள் போல் இருண்ட நெஞ்சு கொண்ட அம் மன்னன்
செய்யும் துன்பமாகிய கொடிய வெப்பத்தை ஆற்றித் தணிக்கும் தன்மையாக,