|
ஒளியை வீசும் பசும்
பொன் மயமான மாளிகைகளில் உச்சியில் விரித்துக்
கட்டிய அழகிய கொடிகளின் கூட்டம், ஒளியைப்பரப்பும் இம்மூவரும் அங்கு
வருவதைக்கண்டு, அரசன் அவர்களுக்கும் இழைக்கக் கூடிய வஞ்சனைக்கு
அஞ்சி, "இங்கே வராது நில்லுங்கள், நில்லுங்கள்!" என்று இடைவிடாது தம்
நீண்ட கைகளைக் காட்டித் தடுப்பன போல் தோன்றின.
'தோன்றின'
என்ற சொல் வருவித்து உரைக்கப்பட்டது. அடுத்த
பாடலுக்கும் இது பொருந்தும். 'வெவ்வழல் ஆற்ற விரித்த பூங்கொடிகள்'
என்றதும், அவை, 'நில்லு மின் என ... நீண்ட கை காட்டுவ போன்றன'
என்றதும் தற்குறிப்பேற்ற அணியாம்.
| 60 |
மண்புடை மான மன்னனை வணங்கி வளம்பெறும் பசியபொற்
கோயில்
விண்புடை தீண்டி மின்மணிக் கோட்டின் மீதொளிர்
பதாகைநின் றாட
லொண்புடைக் கொடிகா ணில்லுமி் னின்மி னுயிரடுந் துயரற
வந்த
வெண்புடை காக்கு மருட்புரி நாத னிவனென வமர்த்திடல்
போன்றே. |
| |
மண் புடை வான
மன்னனை வணங்கி வளம் பெறும் பசிய பொற்
கோயில்
விண் புடை தீண்டி மின் மணிக் கோட்டின் மீது ஒளிர் பதாகை
நின்று ஆடல்,
"ஒண் புடைக் கொடிகாள், நில்லுமின், நின்மின்; உயிர் அருந்துயர்
அற வந்த
எண் புடை காக்கும் அருள் புரி நாதன் இவன்!" என அமர்த்திடல்
போன்றே. |
வானுலக அரசனாகிய
கடவுளை இம்மண்ணுலகில் வணங்கி மக்கள்
வளம் பெறுவதற்கான பசும்பொன் மயமான கோவிலில், வானத்தைத்
தொட்ட வண்ணம் ஒளிரும் மணிகள் பதித்த கோபுரத்து உச்சிமீது ஒளியுடன்
விளங்கும் கொடி இடைவிடாது ஆடும் தோற்றம், "நாலு பக்கமுள்ள ஒளி
பொருந்திய கொடிகளே, அசையாது நில்லுங்கள், நில்லுங்கள்;
உயிர்களுக்கெல்லாம் பாவமாகிய அருந்துயர் நீங்கவென்று வந்துதித்தவனும்,
|