பக்கம் எண் :

முதற் காண்டம்750

எட்டுத் திசைகளையும் காக்கும் அருள் கொண்டவமாகிய ஆண்டவனே
இவன்!' என்று கூறி அவற்றை அமர்த்துவது போல் தோன்றியது.
 
                   61
சுதைநலம் ஞாயின் முலைநிறை வரைந்து துகிலென
                               வகழியைச் சூடிப்
புதைநல விருள்கொண் முகினெடுங் கூந்தல் பொறுத்துயர்
                               கோபுர முகத்திற்
றதைநலங் கொணரிம் மூவரைக் காணத் தடம்விழி
                               திறந்தெனத் திறந்த
வதைநல மணிகள் ருயிற்றிய வாயி லருமறை வடிவினோர்
                               புக்கார்.
 
சுதை நலம் ஞாயில் முலை நிறை வரைந்து, துகில் என
                                அகழியைச் சூடி,
புதை நல இருள் கொள் முகில் நெடுங் கூந்தல் பொறுத்து,
                                உயர் கோபுரமுகத்தில்,
ததை நலம் கொணர் இம் மூவரைக் காணத் தடம் விழி திறந்து
                                எனத் திறந்த
வதை நல மணிகள் குயிற்றிய வாயில் அரு மறை வடிவினோர்
                                புக்கார்.

     முலைகள் போல மதிலுறுப் பெல்லாம் சாந்து கொண்டு பொம்மைகள்
நலமாக நிறைய அமைத்து, ஆடை போலச் சுற்றிலும் அகழியைக்
கொண்டிருந்து, நீர் நலம் தன்னுள் புதைந்த இருண்ட மேகத்தை நெடிய
கூந்தலாகத் தாங்கி, நிறைந்த நலங்களைக் கொணரும் இம்மூவரைக்
காணுமாறு உயர்ந்த கோபுரமாகிய தன் முகத்திலுள்ள பெரிய கண்ணைத்
திறந்து பார்ப்பது போல் திறந்து கிடந்ததும், வதைத்தாற் போல் செதுக்கிப்
பட்டை தீட்டிய நல்ல மணிகள் பதிக்கப் பட்டதுமாகிய வாயில் வழியாக,
அரிய வேத வடிவாக அமைந்த மூவரும் உள்ளே புகுந்தனர்.
 
                     62
நூலினும் வழுவாச் செம்மையி னொழுகி நோக்கினு
                    மகன்றொளித் தோடி
நூலினு மலிசீர்ச் சிறப்பணித் தெருவி னுண்மணிக்
                    கொடிஞ்சிவண் டேருங் காலினுங்
காலிற் பாய்பரி மாவுங் கடாங்கழி கரிகளு நெருங்கக்
காலினும் பருஞ்சூ ழியாவையு நீக்கிக் கதிபுரி வேந்தர்போ
                                    யினரே.