பக்கம் எண் :

முதற் காண்டம்751

நூலினும் வழுவாச் செம்மையின் ஒழுகி, நோக்கினும்
                             அகன்று ஒளித்து ஓடி,
நூலினும் மலி சீர்ச் சிறப்பு அணித் தெருவில், நுண் மணிக்
                             கொடிஞ்சி வண் தேரும்,
காலினும் காலின் பாய் பரிமாவும், கடாம் கழி கரிகளும்
                             நெருங்க,
காலின் உம்பரும் சூழ் யாவையும் நீக்கி, கதி புரி வேந்தர்
                             போயினரே.

     இட்ட நூலொழுங்கைக் காட்டிலும் தவறாத செம்மையோடு அமைந்து,
கண்பார்வைக்கும் எட்டாத நீளமாய் ஓடி மறைந்து, நூல்கள் கூறும்
சிறப்புகளைக் காட்டிலும் செல்வச் சிறப்பு அமைந்த அழகிய தெருவில்,
நுண்ணிய மணிகள் பதித்த தேர் மொட்டைக் கொண்டுள்ள வளமான
தேர்களும், காற்றைக் காட்டிலும் காலால் விரைந்து பாயும் குதிரைகளும்,
மதத்தைப் பொழியும் யானைகளும் நெருங்கி நிற்க, வானவரும் காலால்
நடந்து சுற்றிலுமுள்ள யாவற்றையும் விலக்கி வழிபிடித்துக் கொடுக்க,
வான்வீட்டைத் தரும் மன்னராகிய மூவரும் நடந்து உள்ளே போயினர்.
 
                   63
அகிலடும் புகையும் வாசபூம் புகையு மடெர்ந்துநல்
                          லிருள்சயுந் தெருவின்
முகிலடுங் குன்றிற் றுணைமயில் திரிந்த முகமென
                          விருவரே நடந்து
துகிலொடு மேந்துங் குழவியம் முகிலுட் டோன்றிய
                          மதியெனத் தோன்றி
யிகலடு மின்பத் தெவருமுட் குளிர விளங்கதிர் பரப்பியே
                          போனார்.
 
அகில் அடும் புகையும் வாச பூம் புகையும் அடர்ந்து நல் இருள்
                                   செயும் தெருவில்,
முகில் அடும் குன்றில் துணை மயில் திரிந்த முகம் என
                                   இருவரே நடந்து,
துகிலொடும் ஏந்தும் குழவி அம் முகிலுள் தோன்றிய மதி எனத்
                                   தோன்றி,
இகல் அடும் இன்பத்து எவரும் உள் குளிர, இளங் கதிர்
                                   பரப்பியே போனார்.