பக்கம் எண் :

முதற் காண்டம்75

     நெருங்கிச் சென்ற சிற்றரசர்தம் குடைகளும் கொடிகளும் இருளை
விளைவிக்க, அவ்விடத்து ஒளி செய்த அவர்தம் அணிகளோடு பெரிய
பொன்னாலான சிறந்த முடிகளும் சென்ற இடமெல்லாம், அந்நகரம்
முழுவதும் ஒப்பற்ற சிறப்போடு வாழுமாறு, தெளிந்த நடுப்பகலை
விளைவித்தன.

     குடை கொடிகளின் இருளைக் கலன் முடிகள் உடனே களைந்து,
இரவு ஏற்படாமல் பகலை நிலைபெறச் செய்தன என்பது கருத்து.

     நெரிந்தன, எரிந்தன, திரிந்தன - 'அன்' சாரியை பெற்ற
பெயரெச்சங்கள்.
  
              26
சங்கிட விம்மிய தரள மோடியை
கொங்கிட விம்மிய கோதை யார்மது
பொங்கிட விம்மிய வளிபு சித்திசை
யங்கிட விம்மிய வின்ப மந்நகர்.
 
சங்கு இட விம்மிய தரளமோடு இயை
கொங்கு இட விம்மிய கோதை ஆர் மது
பொங்கிட, விம்மிய அளி புசித்து, இசை
அங்கு இட விம்மிய இன்பம் அந் நகர்.

     சங்குகள் ஈன்று தந்த ஒளி நிறைந்த முத்துக்களைக் கோத்த
மாலையோடு மார்பில் இறைந்து, வாசனை வெளிப்படக் கிடந்த மலர்
மாலைகளினின்று நிறைந்த மது பொங்கி வழிய, இரைந்து சூழ்ந்த
வண்டுகள் அத்தேனை உண்டு, அங்கு இசை பாட, அந் நகரில்
இன்பங்கள் நிறைந்தன.

     முத்து வடங்களையும் மலர் மாலைகளையும் அணிவதால் இன்பமும்,
வண்டுகள் பாடும் இசையைக் கேட்பதால் இன்பமுமாக இன்பங்கள் பல
ஆயின. தரளம் - முத்து. அது ஆகு பெயராக முத்துமாலையைக்
குறித்தது.
 
             27
நாறிய நானமு நறும கிற்புகை
யூறிய கானமு முறைத்த சந்தமும்
வீறிய மதுமலர் மிடைந்த வாசமுந்
தேறிய வெறியோடு செறிந்த வந்நகர்.