நாறிய நானமும்,
நறும் அகில் புகை
ஊறிய கானமும், உரைத்த சந்தமும்,
வீறிய மது மலர் மிடைந்த வாசமும்
தேறிய வெறியொடு செறிந்த அந்நகர் |
மணமுள்ள கஸ்தூரியும்,
நறுமணமுள்ள அகிற் கட்டை எரிந்த
புகையினின்று கிளம்பிய வாசனையும், தேய்த்தெடுத்த சந்தன வாசனையும்,
பெருகிய தேனுள்ள மலர்களிற் செறிந்த வாசனையும் ஒன்றாகக் கலந்து
திரண்ட வாசனையோடு அந்நகரெல்லாம் நிறைந்தன.
கானம் - 'கான்'
என்ற சொல் 'அம்' சாரியை பெற்று நின்றது.
28
|
பூந்துறைத்
தெரியல்கள் பொழிந்த தேறலும்
காந்துறைத் தசும்பிடை கமழு நீரமுந்
தேந்துறைக் குங்குமத் தெளிந்த சுண்ணமு
மாந்துறைத் திரள்மணத் தார்ந்த வந்நகர். |
|
பூந்
துறைத் தெரியல்கள் பொழிந்த தேறலும்,
காந்து உரைத் தசும்பு இடை கமழும் நீரமும்,
தேம் துறைக் குங்குமத் தெளிந்த சுண்ணமும்
ஆம் துறைத் திரள் மணத்து ஆர்ந்த அந் நகர். |
பூ வகைகளாற்
கட்டிய மாலைகள் பொழிந்த தேனும், ஒளியுள்ள
உறையாகிய பொற் குடங்களில் மணம் கமழும் பன்னீரும், இனிய வகைக்
குங்குமத்தின் தெளிந்த வாசனைப் பொடியும் போன்று, பல வகையாகத்
திரண்ட மணங்களால் அந்நகரத்து இடமெல்லாம் நிறைந்தன.
காந்து
- 'காந்தம்' என்ற சொல் கடைக் குறையாக நின்றது.
29
|
தேசுசூழ்
செந்துகில் திருந்துங் காலின்மேற்
காசுசூழ் தமனியக் கம்ப லந்திரைத்
தூசுசூழ் நித்திலந் துதைந்த குஞ்சுகள்
பாசுசூழ் மணிச்சுவர் படுக்கு மாடமும். |
|