தேசு சூழ் செந்
துகிர் திருந்தும் காலின் மேல்,
காசு சூழ் தமனியக் கம்பலம், திரைத்
தூசு சூழ் நித்திலம் துதைந்த குஞ்சுகள்,
பாசு சூழ் மணிச் சுவர் படுக்கும் மாடமும். |
ஒளி சூழ்ந்த
செம்பவளத்தால் திருந்தச் செய்த தூண்களின் மேல்,
மணிகள் சூழப் பதித்த பொன்னாலாகிய மேற்கட்டியும், திரைச் சீலைகளைச்
சுற்றிலும் முத்துக்கள் செறிந்த குஞ்சங்களும் உடையதாய், பச்சையொளி
சூழப் பரப்பும் மரகத மணிகள் பதித்த சுவர்களை உடைய படுக்கை அறை
வீடும் ஒவ்வொரு மாளிகையிலும் உள்ளது.
இங்கும் இனி
வரும் பாடல்களிலும் 'மாடம்' என்றது அரச
மாளிகையை முழுமையாகச் சுட்டாமல், அதன் அறை வீடுகளைத்
தனித்தனியே குறித்ததாகக் கொள்க. 'மாடமும்' என்று நின்ற தொடருக்கு
முடிக்குஞ் சொற்கள் வருவிக்கப்படுதலும் அவ்வாறே கொள்க. காலும்
கம்பலமும் திரையும் குஞ்சமும் மெத்தையைச் சுற்றிய அலங்காரங்கள்.
குஞ்சு - 'குஞ்சம்' என்ற சொல் கடைக் குறையாக நின்றது. 'பாசு சூழ்'
என்ற அடை மொழியால் 'மணி' என்ற பொதுப் பெயர் மரகதத்தை உணர்த்திற்று. 'காசு'
என்றது, பவளமும் மரகதமும் அல்லாத பிற மணிகள்
என்க.
30
|
பொருந்தல
ருரத் தொளி புசித்த வாளொடும்
விருந்தமர் புள்ளினம் விழைந்த வேலொடும்
வருந்தமர் கடந்தவில் மழுவி னோடுமற்
றிருந்தமர் படைக்கல மிருக்கு மாடமும். |
|
பொருந்தலர்
உரத்து ஒளி புசித்த வாளொடும்,
விருந்து அமர் புள் இனம் விழைந்த வேலொடும்,
வருந்து அமர் கடந்த வில், மழுவினோடு, மற்று
இருந்து அமர் படைக்கலம் இருக்கும் மாடமும். |
பகைவர் தம்
மார்பின் ஒளியைத் தன் வெற்றியால் உண்டு தீர்த்த
வாளோடும், முன் பகைவர் உடலை விருந்தாக உண்ட பறவைக் கூட்டம்
இப்பொழுதும் கிடைக்குமென விரும்பித் தொடரும் வேலோடும், பகைவர்
வருந்துதற்குக் காரணமான போரில் வெற்றி கண்ட வில்லோடும்,
மழுவாயுதத்தோடும் மற்றும் கையிருப்பாக அறையில் அமர்ந்துள்ள
படைக்கலம் இருக்கும் அறைவீடும் உள்ளது. |