பக்கம் எண் :

முதற் காண்டம்753

                    65
தூமமேய்ந் திருண்ட குழலினார் மார்பிற் றுளங்கிய
                               முத்தணி வடமேற்
காமனே களிப்புற் றூசலா டியகால் கசடறு மிவர்வரக்
                               கண்டு
வீமமே யுற்று நடுக்கொடு வழுவி வீழ்ந்துளத் தழற்றழ
                               லாறித்
தாமமே யளிபோற் குளிரவுட் களித்துத் தயவோடு தீதறப்
                               புகழ்ந்தார்.
 
தூமம் மேய்ந்து இருண்ட குழலினார் மார்பில் துளங்கிய முத்து
                               அணி வடம் மேல்
காமனே களிப்பு உற்று ஊசல் ஆடிய கால், கசடு அறும் இவர்
                               வரக் கண்டு,
வீமமே உற்று நடுக் கொடு வழுவி வீழ்ந்து, உளத்து அழற்று
                               அழல் ஆறி,
தாமம் மேய் அளி போல் குளிர உள் களித்து, தயவொடு தீது
                               அறப் புகழ்ந்தார்.

     அகிற் புகை பரவிஇருண்ட கூந்தலை உடைய விலைமகளிர் தம்
மார்பில் விளங்கிய முத்து மாலையாகிய வடத்தின் மேல் மன்மதன்
களிப்புற்று ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கையில், குற்றமற்ற இம்மூவரும்
அவ்வழியே வரக் கண்டு, அச்சங் கொண்டு நடுக்கத்தோடு அவன் தவறி
விழுந்து மறையவே, அம் மகளிர் தம் உள்ளத்தில் எரித்துக் கொண்டிருந்த
காம நெருப்பு ஆறி, பூமாலையில் தேனை உண்ணும் வண்டு போல் குளிர
மனம் களித்து, தம் காமத் தீமை நிலையாய் நீங்கி ஒழியுமாறு அன்போடு
அம்மூவரையும் புகழ்ந்தனர்.

     காமன் - காம இச்சையை ஒரு தெய்வமாகக் கொண்டு கூறிய உருவம்.
 
                        66
விடுந்திரை கொழித்த விம்மொலி போன்ற விற்பவர் கொள்பவ
                                         ரொலியு
நெடுந்திரை கொழித்த திருத்திரள் போன்ற நிதியொடு நிறமணி
                                         பலவும்
படுந்திரை கொழித்த மயங்கலை போன்ற பரிகரி யீட்டமு
                                         மமைவின்
கடுந்திரை கொழித்த கருங்கடல் போன்ற கடை வழி போயினார்
                                         மாதோ.