விடும் திரை
கொழித்த விம் ஒலி போன்ற விற்பவர்
கொள்பவர் ஒலியும்,
நெடுந் திரை கொழித்த திருத் திரள் போன்ற நிதியொடு நிற
மணி பலவும்,
படும் திரை கொழித்த மயங்கு அலை போன்ற பரி கரி
ஈட்டமும் அமைவின்,
கடுந் திரை கொழித்த கருங் கடல் போன்ற கடை வழி
போயினார் மாதோ. |
கரையை நோக்கிக்
கடல் விடும் திரைகள் கரையில் ஒதுங்கி வந்து
விழுவதனால் முழங்கும் ஒலி போன்று விற்பவரும் வாங்குபவரும் எழுப்பும்
ஓசையும், நெடிய திரைகள் கரையிற் கொண்டு ஒதுக்கிய செல்வத் திரள்
போன்ற பொன்னோடு வெவ்வேறு நிறமுள்ள மணிகள் பலவும், விழும்
திரைகள் ஒதுக்கித் தள்ளுவதனால் மயங்கும் அலை போன்ற குதிரை
யானைகளின் திரளும் பொருந்திக் கிடத்தலால், கடுமையான திரைகளைக்
கரை நோக்கி ஒதுக்கித் தள்ளியவண்ணமிருக்கும் கருங்கடல் போன்ற
கடைத் தெரு வழியே மூவரும் போயினர்.
'மாதோ' அசைநிலை.
கடலினுள் அலைவது அலை எனவும், கரையில்
திரண்டு எழுந்து விழுவது திரை எனவும் வேறுபாடு காண்க.
| 67 |
மோயிசன்
றன்கைச் சூரலிற் பிரிந்த மொய்கடல் வழிவிடுத்
தன்ன
மீயிசை தளங்க ளியாவருங் காணா மிடைந்துசூழ்
வந்துசெய் நெறியாற்
போயிசை பொருட்சேர் நசையெனுந் திரையுட் புக்கிலர்
மூழ்கிலர் கடந்து
சேயிசை சுடர்போன் றக்கட னீக்கிச் செயிரிருட் சீக்கவாங்
குதித்தார். |
| |
மோயிசன் தன்
கைச் சூரலின் பிரிந்த மொய் கடல் வழி விடுத்து
அன்ன,
மீ இசை தளங்கள், யாவரும் காணா, மிடைந்து சூழ் வந்து செய்
நெறியால் போய்,
இசை பொருள் சேர் நசை எனும் திரையுள் புக்கிலர் மூழ்கிலர்
கடந்து,
சேய் இசை சுடர் போன்று அக்கடல் நீக்கி, செயிர் இருள் சீக்க
ஆங்கு உதித்தார். |
|