|
மோயீசனின்
கையிலுள்ள பிரம்பினால் இரண்டாகப் பிரிந்த திரண்ட
செங்கடல் இசுரவேலருக்கு வழிவிட்டதுபோல, வானத்திற் பொருந்தியுள்ள
படையணிகளாகிய வானவர், யாரும் தம்மைக் காணாத முறையில்,
நெருங்கிச் சுற்றிலும் வந்து இடம் பிடித்துக்கொடுத்த வழியோடு போய்,
புகழும் பொருளும் பற்றி எழும் ஆசை என்னும் கடலுள் புகாதவரும்
மூழ்காதவருமாய்க் கடந்து, செந்நிறம் பொருந்திய கதிரவன் போன்று
அந்த மக்கட் கடலை விட்டு நீங்கி, பாவமாகிய இருளைப் போக்கும்
பொருட்டு அப்பால் சென்று உதித்தனர்.
கடல் வழி விடுத்தது
: 6 : 37 அடிக் குறிப்பு நோக்குக. திரை -
திரை கொண்ட கடலுக்கு ஆகுபெயர்.
| 68 |
உதித்தன
ரென்ன வாயிரங் கதிரோ னுவமையிற் றோர்த்தென
வொளித்துக்
குதித்தனன் கருந்தண் புணரியுட் புதைப்பக் கோதையுங்
கொழுந்தவத் தவனும்
புதித்தன மிழைத்த மணிக்கலத் துயிரைப் புரியமு தேந்திய
போன்றே
விதித்தநன் மறையி னாதனை யேந்தி விருப்பொடு சிறுமனை
புக்கார். |
| |
உதித்தனர் என்ன,
ஆயிரம் கதிரோன் உவமையில் தோர்த்து என,
ஒளித்துக்
குதித்தனன் கருந்தண் புணரியுள் புதைப்ப, கோதையும் கொழுந்
தவத்தவனும்,
புதித் தனம் இழைத்த மணிக் கலத்து உயிரைப் புரி அமுது ஏந்திய
போன்றே,
விதித்த நன் மறையின் நாதனை ஏந்தி, விருப்பொடு சிறு மனை
புக்கார். |
மூவரும் அப்பால்
சென்று உதித்தனரென்று கண்டு, ஆயிரம்
கதிர்களை உடைய கதிரவன் உவமையில் அவர்கட்குத் தோற்றவன் போல்,
ஒளித்துப்போய்க் கருமையான குளிர்ந்த கடலினுள் தன்னை
மறைத்துக்கொள்ளக் குதித்தான். புதிய பொன்னால் செய்து மணி பதித்த
பாத்திரத்தில் உயிர் தரும் அமுதத்தை ஏந்தியது போன்று, தானே
வகுத்துக் காட்டிய நல்ல வேதத்தின் தலைவனாகிய ஆண்டவனை
ஏந்திக்கொண்டு, மாலை போன்ற மரியாளும் வளமான தவத்தோனாகிய
சூசையும் விருப்பத்தோடு ஒரு சிறு வீட்டில் சென்று புகுந்தனர்.
தோர்த்தல்
- தோற்றல் என்பதன் இடைப்போலி. |