பக்கம் எண் :

முதற் காண்டம்756

                       69
கோணிக ருணர்விற் கைப்பொருட் டந்து குறும்புகழ் கோடலே
                                    சிறிய
வாணிகர் தொழிலா மீங்குமா றுணரார் வழங்குமொன் றாயிர
                                    மாகச்
சேணிகர் பயனை விளைக்குமென் றுள்ளிச் செல்வர்மூன்
                               றளித்தவா னிதியம்
பூணிகர் மறைநூ லணிவள னிருளின் போர்வைபோர்த் தாலயத்
                                    தளித்தான்.
 
கோண் நிகர் உணர்வில் கைப் பொருள் தந்து குறும் புகழ்
                                கோடலே சிறிய
வாணிகர் தொழில் ஆம். ஈங்கு மாறு உணரார் வழங்கும் ஒன்று
                             ஆயிரம் ஆகச்
சேண் நிகர் பயனை விளைக்கும் என்று உள்ளி, செல்வர் மூன்று
                             அளித்த வான் நிதியம்,
பூண் நிகர் மறை நூல் அணி வளன், இருளின் போர்வை போர்த்து
                             ஆலயத்து அளித்தான்.

     கோணலான உணர்வோடு தம் கையிலுள்ள பொருளைத் தந்து,
அதற்குக் கைம்மாறாகக் குறுகிய காலம் நிற்கும் புகழைக் கொள்ளுதல்
ஊதியமே கருதும் சிறுகுணம் படைத்த வணிகர்க்கு உரிய தொழிலாகும்.
அணிக்கு நிகராக வேத நூலை அணிந்து கொண்ட சூசையோ, இவ்வுலகில்
கைம்மாறு கருதாதவர் வழங்கும் ஒன்று ஆயிரமாக வானுலகிற்கொத்த
பயனை விளைவிக்குமென்று கருதி, செல்வம் மிக்க மூவரசர் அளித்த
பெருஞ்செல்வத்தை இருளாகிய போர்வையால் மூடி மறைத்துக்
கோவிலுக்குக் காணிக்கையாகக் கொடுத்தான்.

     'வான் நிதியம் அளித்தான்' எனப்படினும், முன் 11 : 121ற் கண்டபடி,
கோவிலுக்குச் சேர்வது மூன்றிலொன்று எனத் தெளிக.