பக்கம் எண் :

முதற் காண்டம்757

                       70
விண்டிறந் துதைந்த பூசனை யன்றே விழிப்பதற் கருத்தியோ
                                    டுயர்வான்
கண்டிறந் தென்னக் கதிரவன் முந்நீர் கடிந்தெழுங் காலையி
                                    லினிதாய்ப்
பண்டிறந் துவைப்ப வார்க்குநற் சுடர்செய் பசியபொற்
                               கோயிலை விருப்பங்
கொண்டிறந் திருவர் கோதறு பலியாய்க் குழவியை யேந்தியெய்
                                    தினரே.
 
விண் திறம் துதைந்த பூசனை அன்றே விழிப்பதற்கு அருத்தியோடு,
                                    உயர்வான்
கண் திறந்து என்ன, கதிரவன் முந்நீர் கடிந்து எழும் காலையில்,
                                    இனிதாய்ப்
பண் திறம் துவைப்ப ஆர்க்கும் நல் சுடர் செய் பசிய பொற்
                                    கோயிலை விருப்பம்
கொண்டு, இறந்து, இருவர் கோது அறு பலியாய்க் குழவியை ஏந்தி,
                                    எய்தினரே.

     வானுலகிற்குரிய மாண்பு தோய்ந்த வழிபாட்டை அன்றே காண்பதற்கு
ஆசை கொண்டு, உயர்ந்த வானம் தன் கண்ணைத் திறந்தாற் போல,
கதிரவன் கடலை விட்டு எழும் காலைவேளையில், சூசையும் மரியாளுமாகிய
இருவரும் குற்றமற்ற பலிப் பொருளாகக் குழந்தை நாதனை ஏந்திக் கொண்டு,
அந்தச் சிறு வீட்டை விட்டகன்று, இசைக் கருவி வகைகள் கலந்து இனிதாய்
முழங்கும் நல்லொளி பரப்பும் பசும் பொன் மயமான கோவிலை
விருப்பங்கொண்டு சென்றடைந்தனர்.

     குழந்தையின் உயிருக்கு ஈடாகக் காணிக்கை செலுத்தி மீட்டுக்
கொள்ளும் முறை கருதி, 'பலியாய்க் குழவியை ஏந்தி எய்தினர்' என்றார்.
 
                       71
மேனிலா வெறிக்குங் குருமணி குயிற்றி விழுத்தக நிரைநிரை
                                    தீட்டிப்
பானிலா வெறிக்கும் பளிக்குயர் கோயில் பற்பல சாளர
                                    விழிகள்,
வானிலா வெறிக்கு மகவினை நோக்க மலர்ந்தபின் வம்மினென்
                                    றழைப்பத்
தூநிலா வெறிக்க மணிக்கத வகற்றிச் சுருதிவாய் திறந்திவர்
                                    புக்கார்.