|
நிறைந்து நின்ற
தூபப் புகையும் மேலே காட்டியவாறுள்ள அழகின்
தெளிவும் மயங்குதலால் கண்ணுக்குப் படைத்த விருந்து போல் துலங்க,
இருவரும் அழகிய மணிகள் நிறைந்த கோவிலுக்குள் புகுந்து, சேர்த்துக்
கட்டிய தெய்வத்துவம் மனிதத்துவம் என்ற இரு தன்மைகளுக்குள் ஒன்றாய்
விளங்கும் மெய்ப் பொருளாகிய குழந்தை நாதனை, பாவ வினையின்
தீமையைப் போக்கிய பலிப்பொருள் என்று ஆகுமாறு போற்றி இட்டு
வைத்துத் தாமும் அருகில் நின்றனர்.
'வாமத் தெருட்சி'
என்றது, முந்திய பாடலில், "மேனிலா ....தீட்டி,"
என்ற பகுதியை நினைவிற்கொண்டு கூறியது.
| 73 |
வாய்மையோர்
புகுங்கால் கோவில் வணக்குரி பணியில்
வைகுந்
தூய்மையோ ரெனவுட் கோட்டந் துறந்தன ரவையின்
மூத்தோன்
மேய்மையோ டுயர்ந்த வேத மேற்படர் கொழு கொம்
பன்னான்
சீய்மையோ னென்னும் வாய்ந்த சீர்கெழு முனியும் வந்தான். |
| |
வாய்மையோர்
புகுங் கால், கோவில் வணக்கு உரி பணியில்
வைகும்
தூய்மையோர் என உள் கோட்டம் துறந்தனர் அவையின்
மூத்தோன்,
மேய்மையோடு உயர்ந்த வேதம் மேல் படர் கொழுகொம்பு
அன்னான்,
சீய்மையோன் என்னும் வாய்ந்த சீர்கொழு முனியும் வந்தான். |
உண்மைக்கு உறைவிடமான
இவ்விருவரும் புகுந்த போதே, கோவில்
வழிபாட்டு வணக்கத்திற்குரிய குருத்துவப் பணியில் ஈடுபடும்
தூய்மையுடையோர் என்னத் தக்கவாறு மனக் கோணலெல்லாம் நீங்கியவர்
திருக் கூட்டத்தில் முதியவனும், மெய்மையினால் மேம்பட்ட வேதம்
என்னும் கொடி மேலே படர்வதற்கான கொழுகொம்பு போன்றவனுமாகிய
சீமையோன் என்னும் பெயர் வாய்ந்த சிறப்புப் பொருந்திய முனிவனும்
அங்கு வந்து சேர்ந்தான்.
மெய்மை
'மேய்மை' என நீட்டல் விகாரம் கொண்டது. சீமையோன்
'சீய்மையோன்' என எதுகை நோக்கித் திரிந்தது. |