| 74 |
உணங்கிய
மரத்திற் கார்ந்த வுயிர்வரு மாரி போன்று
மிணங்கிய விருளைச் சீக்கு மிரவியே போன்று நாதன்
பிணங்கிய வினைக டீர்ப்பப் பிறந்திவன் மனுவாய்க் காண
வணங்கிய முனிவன் நாளும் வரந்தர வேண்டு வானே. |
| |
உணங்கிய
மரத்திற்கு ஆர்ந்த உயிர் வரு மாரி போன்றும்
இணங்கிய இருளைச் சீக்கும் இரவியே போன்றும், நாதன்
பிணங்கிய வினைகள் தீர்ப்பப் பிறந்து இவண் மனு ஆய், காண,
வணங்கிய முனிவன், நாளும் வரம் தர வேண்டுவானே. |
வாடிய மரத்திற்கு
நிறைந்த உயிர் வரப் பொழியும் மழை போன்றும்,
பொருந்திக் கிடந்த இருளை ஒழிக்கும் ஞாயிறு போன்றும், மக்களிடையே
பின்னிக் கிடந்த பாவ வினைகளைப் போக்க ஆண்டவன் இவ்வுலகில்
மனிதனாய்ப் பிறக்கையில், அவனைத் தான் காண வரம் தருமாறு வணங்கிய
முனிவன் நாள்தோறும் வேண்டுதல் புரிவான்.
| 75 |
வம்பலர்ச்
சுனையி னீருள் வலம்புரி பிறத்தல் போன்றுங்
கொம்பலர்த் தருவி னுச்சி குவளையே பூத்தல் போன்று
மம்பலர்க் கன்னி விள்ளா தளித்ததோர் மகவாய் நாதற்
கம்பலர்க் கண்கள் பூப்பக் காண்பையென் றிறைவன்
சொன்னான். |
| |
"வம்பு அலர்ச்
சுனையின் நீருள் வலம்புரி பிறத்தல் போன்றும்,
கொம்பு அலர்த் தருவின் உச்சி குவளையே பூத்தல் போன்றும்,
அம்பு அலர்க் கன்னி விள்ளாது அளித்தது ஓர் மகவாய்,
நாதற்
கம்பு அலர்க் கண்கள் பூப்பக் காண்பை" என்று இறைவன்
சொன்னான். |
"கடலில் பிறக்கக்கூடிய
வலம்புரிச் சங்கு வாசனையுள்ள மலர்களைக்
கொண்டுள்ள குளத்து நீரில் பிறப்பது போலவும், நீர்க்கொடியில் பூக்கக்கூடிய
குவளை மலர் தன் கிளைகளில் மலர்களைக் கொண்டுள்ள மரத்தின்
உச்சியில் பூப்பது போலவும், நீரில் வளரும் தாமரை மலர் போன்ற கன்னி,
|