|
தன் கன்னிமை குன்றாமல்
பெற்றுத் தந்த ஒரு மகனாய், கொம்பில் பூத்த
மலர் போன்ற உன் கண்கள் மலர அவ்வாண்டவனை நீ காண்பாய்"
என்று ஆண்டவனே அவனுக்குச் சொல்லியிருந்தான்.
| 76 |
நம்பிய வின்ன
வாய்மை நல்லுயி ராக நின்றா
னம்புய மலரின் சாய லவதரித் துதித்த நாதன்
கொம்பிய வினைக டீர்ப்பக் கோயில்வந்
தடைந்தானென்னப்
பம்பிய காட்சி தோன்றிப் பறந்தென வன்று வந்தான். |
| |
நம்பிய இன்ன
வாய்மை நல் உயிர் ஆக நின்றான்;
அம்புய மலரின் சாயல் அவதரித்து உதித்த நாதன்,
கொம்பிய வினைகள் தீர்ப்பக் கோயில் வந்து அடைந்தான்
என்ன,
பம்பிய காட்சி தோன்றி, பறந்து என அன்று வந்தான். |
தப்பாது நிகழுமென்று
தான் நம்பியிருந்த இந்த வாக்குறுதியை
நல்ல உயிராகக் கொண்டு சீமையோன் நெடிது வாழ்ந்து நின்றான்; தாமரை
மலரின் சாயலாக அவதரித்துப் பிறந்த ஆண்டவன், திரண்ட பாவ
வினைகளைத் தீர்க்கும் பொருட்டுக் கோவிலுக்கு வந்து சேர்ந்துள்ளான்
என்று, எழுச்சி தரும் ஒரு காட்சியில் தோன்றக் கண்டு, பறந்த
தன்மையாய் அன்று அங்கு வந்தான்.
'கொம்மிய'
என்பது, எதுகை இன்னோசைப் பொருட்டு, 'கொம்பிய'
என நின்றது.
| 77 |
விண்டன
மலர்போல் விண்ட விரும்பினான் வெய்தென் றெய்திக்
கண்டனன் கனிந்த கண்ணாற் கறவைகாண் கன்றின் வெஃகி
யுண்டன வுருவிற் குன்றா வுயர்குணத் திறைவன் றாளைக்
கொண்டனன் றலையிற் சூடிக் குணக்கடற் குளித்துத் தாழ்ந்தான். |
| |
விண்டன மலர்
போல் விண்ட விரும்பினான் வெய்தென்று எய்திக்
கண்டனன்; கனிந்த கண்ணால், கறவை காண் கன்றின் வெஃகி
உண்டு, அன உருவில் குன்றா உயர் குணத்து இறைவன் தாளைக்
கொண்டனன் தலையில் சூடி; குணக் கடல் குளித்துத் தாழ்ந்தான். |
|