|
விரிந்த தாமரை
மலர் போல் மலர்ந்த விருப்பங் கொண்ட சீமையோன்
விரைந்து சென்று, அக்குழந்தையைக் கண்டான்; தாய்ப் பசுவைக் கண்ட
கன்றைப் போல் விரும்பித் தன் கனிந்த கண்களால் அவ்வழகைப் பருகி,
அந்த மனித உருவிலும் குறைபடாத உயர்ந்த குணத்துடன் விளங்கிய
அவ்வாண்டவன் திருவடிகளைத் தன் தலையில் அணிந்து கொண்டான்;
அக்குணக் கடலில் குளித்துப் பணிந்து வணங்கினான்.
| 78 |
தொழுதுதன்
னுளத்தின் பாற்றா துணையடி மலரைப் யேற்றி
யழுதுதன் கண்ணீ ராட்டி யருட்கொழுந் துகிலி னீவி
முழுதுதன் கண்கட் கையான் முகக்கவின் முகந்துண் டார்வத்
திழுதுதன் சுவையிற் காய்த்த விருங்கனி சுவைத்து விள்ளான். |
| |
தொழுது, தன்
உளத்து இன்பு ஆற்றா, துணை அடி மலரை ஏற்றி,
அழுது, தன் கண்ணீர் ஆட்டி, அருள் கொழுந் துகிலின் நீவி,
முழுது தன் கண்கள் கையால் முகக் கவின் முகந்து உண்டு,
ஆர்வத்து
இழுது தன் சுவையின் காய்த்த இருங் கனி சுவைத்து, விள்ளான். |
தொழுது, அவ்வின்பத்தைத்
தன் உள்ளத்தில் தாங்கிக் கொள்ள
இயலாமல், அக் குழந்தையின் இரண்டு திருவடி மலர்களையும் போற்றி,
அழுது, தன் கண்ணீரால் குளிப்பாட்டி, அருள் என்னும் வளமான
ஆடையால் தடவித் துடைத்து, தன் கண்களாகிய கையால் அதன் முக
அழகு முழுவதையும் அள்ளிப் பருகி, தன் ஆர்வத்தின் இனிமையும்
கூடிய சுவையோடு பழுத்த பேரின்பமாகிய கனியை உண்டு, அச்சுவை
நீங்காதவன் ஆனான்.
இருங்
கனி - பெருங்கனி. அது பேரின்பமாகிய கனியைக் குறித்தது.
| 79 |
பாருடம்
புயிராய் வந்த பரமனைக் கரத்தி லேந்தி
யீருடம் புயிரொன் றாக வெழுந்தவன் புவப்பிற் பொங்கிச்
சேருடம் பிரண்டொன் றாகச் சேர்த்துபு தழுவி யன்பின்
னேருடம் பெழீஇவீ டுற்ற நிலைமையிற் பாட லுற்றான். |
|