பார் உடம்பு
உயிராய் வந்த பரமனைக் கரத்தில் ஏந்தி,
ஈர் உடம்பு உயிர்ஒன்று ஆக எழுந்த அன்பு உவப்பின்
பொங்கி
சேர் உடம்பு இரண்டு ஒன்றாகச் சேர்த்துபு தழுவி, அன்பின்
நேர் உடம்பு எழீஇ, வீடு உற்ற நிலைமையின் பாடல்
உற்றான்: |
உலகம் என்னும்
உடம்புக்கு உயிராக அவதரித்து வந்த
ஆண்டவனைத் தன் கைகளில் ஏந்தி, இரண்டு உடம்புகளுக்கும் உயிர்
ஒன்று என்ற தன்மையாக எழுந்த அன்பின் மகிழ்ச்சியால் பொங்கி, கூடிய
உடம்புகள் இரண்டும் ஒன்றாகச் சேருமாறு இறுகத் தழுவி, தன் அன்புக்கு
நிகராக உடம்பில் எழுச்சி கொண்டு, மோட்சமே தனக்குக் கிட்டியதுபோல்
பின்வருமாறு பாடத் தொடங்கினான்:
சீமையோன்
பாடல்
அளவொத்த நாற்சீரடி
நான்கு, வெண்டளை பெற்று, இடைமடக்காய்
வந்த பாடல்.
80 |
பாற்கடலென்
னுள்ளப் பதும மலரரும்ப
நூற்கடலே யீங்குதித்தாய் நுன்மலர்க்கண் முத்தரும்ப
நுண்மலர்க்கண் முத்தரும்ப நோய்செய் வினைசெய்தே
மென்மலர்க்கண் முத்தரும்ப வின்று வினைதீர்த்தால். |
|
"பாற் கடல்
என் உள்ளப் பதும மலர் அரும்ப,
நூல் கடலே, ஈங்கு உதித்தாய், நுன் மலர்க் கண் முத்து
அரும்ப!
நுன் மலர்க் கண் முத்து அரும்ப, நோய் செய் வினை
செய்தேம்;
என் மலர்க் கண் முத்து அரும்ப, இன்று வினை தீர்த்தாய்! |
"நூல்களெல்லாம்
அடங்கக்கொண்ட கடல் போன்றவனே, என்
உள்ளமாகிய தாமரை மலர் பாற்கடல்போல் தழைக்கும்படி, உன் மலர்
போன்ற கண்களினின்று அழுகைக் கண்ணீர் முத்துப்போல் அரும்ப, நீ
இவ்வுலகில் மனிதனாய் வந்து பிறந்தாய்! உன் மலர் போன்ற கண்களினின்று
அழுகைக் கண்ணீர் முத்துப்போல் அரும்பும்படி, உனக்குத் துன்பம் தரும்
பாவ வினைகளை நாங்கள் செய்தோம்; நீயோ என் மலர் போன்ற
|