பக்கம் எண் :

முதற் காண்டம்764

கண்களினின்று மகிழ்ச்சிக் கண்ணீர் முத்தாக அரும்பும்படி, இன்றே எங்கள்
பாவ வினைகளை யெல்லாம் போக்கி விட்டாய்!

     'இன்று தீர்த்தாய்' என்றது, பின் தீர்த்தல் உறுதி என்பது பற்றி வந்த
கால வழுவமைதி.
 
                   81
வினைதீர்ப்ப வெய்தி வினைகொண்டாய் பாவப்
புனைதீர்ப்ப வீங்குமனுப் பூட்சிச் சிறைகொண்டாய்
பூட்சிச் சிறைகொண்ட புல்லென் னுயிர்போயுன்
காட்சிச் சிறைகொண்டு கண்டேன் கதிநிலையே.
 
"வினை தீர்ப்ப எய்தி, வினை கொண்டாய்; பாவப்
புனை, தீர்ப்ப, ஈங்கு மனுப் புட்சிச் சிறை கொண்டாய்!
பூட்சிச் சிறை கொண்ட புல் என் உயிர், போய், உன்
காட்சிச் சிறை கொண்டு, கண்டேன் கதி நிலையே!

     "எங்கள் பாவ வினையைத் தீர்க்க வென்று நீ இங்கு வந்தடைந்து,
துன்பமே கொண்டாய்; எங்கள் பாவ விலங்கை நீக்கும் பொருட்டு, நீ
இவ்வுலகில் மனித உடல் என்னும் சிறையை உனக்கென்று எடுத்துக்
கொண்டாய்! உடல் என்னும் சிறையைக் கொண்டுள்ள அற்பமான என்
உயிர், உன்னைக் கண்ட காட்சி என்னும் சிறகைக் கொண்டு பறந்து
செல்ல, மோட்ச கதியின் நிலை இத்தகைய தென்று நான் கண்டு
கொண்டேன்!

     ஆண்டவனைக் கண்டது மோட்சத்தைக் கண்டதாயிற்றென்பது கருத்து:
 
                    82
கண்டேன் கதிநிலையே கண்டுயிரென் பூண்பலினி
யுண்டே னுயிராயன் புன்னடியைச் சூடினே
னுன்னடியைச் சூடி யுனையணுகான் றன்வினையே
தன்னடியைச் சூழ்ந்துதைப்பச் சுட்பெரிவீழ்ந் தாழ்வானே.
 
"கண்டேன் கதி நிலையே; கண்டு, உயிர் என் பூண்பல் இனி?
உண்டேன் உயிராய் அன்பு; உன் அடியைச் சூடினேன்!
உன் அடியைச் சூடி உனை அணுகான், தன் வினையே
தன் அடியைச் சூழ்ந்து உதைப்ப, சுட்ட எரி வீழ்ந்து ஆழவானே!"