"உன்னைக் கண்டதன்
மூலம், மோட்ச கதியின் நிலை
இத்தகையதென்று கண்டுகொண்டேன்; கண்டு, இனியும் ஏன் உயிரைத்
தாங்கிக் கொண்டு இவ்வுலகில் இருப்பேன்? எனக்கு உயிராய் உன்
அன்பையே உட்கொண்டேன்! உன் திருவடியையே தலைக்கு அணியாகச்
சூடிக்கொண்டேன்! உன் திருவடியைத் தனக்குத் தலையணியாகச் சூடி
உன்னை அணுகாதவன், தன் பாவவினையே தன் கால்களைச் சூழ்ந்து
உதைத்துத் தள்ள, சுடும் தன்மையுள்ள நரகத்தில் விழுந்து ஆழ்ந்து
கிடப்பான்!"
காத்திருந்த
வேலை நிறைவேறி விட்டமையால், கடவுள் அடி
சேர்தலே இனி வேண்டத் தக்கதென்பது கருத்து.
அயலவர்
ஆர்வம்
-விளங்காய்,
கூவிளங்காய், கூவிளங்காய், தேமா.
83 |
ஆசையெழு
மின்னவைய ருந்தவனும் பாடி
யோசையெழும் வீணைகுழல் யாழொடிசை பாடப்
பூசையெழும் பூம்புகைபொ லிந்தினிதி னாற
மாசையெழு மாலயமும் வானுலகு போல்வாம். |
|
ஆசை எழும் இன்னவை
அருந் தவனும் பாடி,
ஓசை எழும் வீணை குழல் யாழொடு இசை பாட,
பூசை எழும் பூம் புகை பொலிந்து இனிதின் நாற,
மாசை எழும் ஆலயமு வான் உலகு போல்வு ஆம். |
ஆசையால் பிறக்கும்
இவற்றையெல்லாம் அரிய தவத்தோனாகிய
சீமையோன் பாடி நிற்கையில், ஓசையோடு எழும் வீணையும் புல்லாங்குழலும்
யாழோடு சேர்ந்து இசை பாடவும், பூசையோடு எழும் அழகிய புகை
பொலிந்து இனிது மணக்கவுமாக, பொன்மயமாக எழுந்துநிற்கும்
அவ்வாலயமும் வானுலகம் போல் தோன்றும்.
84 |
கொங்கடரும்
பூமழையும் பாமழையுங் கூர்ப்பச்
சங்கடரும் வாய்த்தரள வெண்குடைக டாங்கத்
திங்கடருந் தீங்கதிரின் சேர்கவரி பொங்க
வங்கடரும் யாவரும ருச்சனையின் மிக்கார். |
|