கொங்கு அடரும்
பூ மழையும் பா மழையும் கூர்ப்ப,
சங்கு அடரும் வாய்த் தரள வெண் குடைகள் தாங்க,
திங்கள் தரும் தீம் கதிரின் சேர் கவரி பொங்க,
அங்கு அடரும் யாவரு அருச்சனையின் மிக்கார். |
சிலர் சொரியும்
மணம் மிகும் பூ மழையும் பாடும் பாடல் மழையும்
ஒன்றாகத் திரளவும், சிலர் சங்கினிடம் திரண்டு கிடக்கும் முத்துக்களை
மாலையாய்க் கொண்ட வெண் குடைகளைத் தாங்கி வரவும், சிலர் மதி
தரும் இனிய கதிர்கள் போல் சேர்ந்து வீசிய சாமரைகள் செறியவுமாக,
அங்கு வந்து கூடும் யாவரும் வழிபாட்டில் மிகுதியாக ஈடுபட்டனர்.
|
85
|
ஒருவரடி
யேற்றிமல ரொள்ளொலியல் சூட
வொருவரகி லோடுமல ரூறுபுகை காட்ட
வொருவர்புக ழுந்தொடையு ணர்ந்தவிசை பாட
வொருவர்வியப் போடுருக வாழுவரோ ருங்கே. |
| |
ஒருவர் அடி ஏற்றி
மலர் ஒள் ஒலியல் சூட,
ஒருவர் அகிலோடுமலர் ஊறு புகை காட்ட,
ஒருவர் புகழும் தொடை உணர்ந்த இசை பாட,
ஒருவர் வியப்போடு உருக, வாழுவர் ஒருங்கே. |
ஒரு
சிலர் குழந்தை நாதனின் திருவடிகளைப் போற்றி ஒளி பொருந்திய
மலர் மாலைகளைச் சூடவும், ஒரு சிலர் அகிலோடு மலர் மணம் ஊறும் பிற
புகைகளும் காட்டி நிற்கவும், ஒரு சிலர் புகழும் தன்மையாய்த் தொடைநலம்
பொருந்திய இசைப் பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கவும், ஒரு சிலர்
வியப்போடு மனம் உருகவுமாக,எல்லோரும் ஒருங்கே நல்வாழ்வு பெறுவர்.
தொடை
- செய்யுளுக்குரிய எதுகை, மோனை போன்ற தொடைகள்.
| 86 |
வான்றவழு
மீன்கடிரள் பூத்ததென மல்கிக்
கான்றவழு மாலையொடு கன்மணிகள் கண்பூத்
தூன்றவழும் யாக்கையுடை நாயகனை நோக்க
மீன்றவழும் வெண்மதியின் மெய்யனுரு மிக்காள். |
|