பக்கம் எண் :

முதற் காண்டம்767

வான் தவழும் மீன்கள் திரள் பூத்தது என, மல்கிக்
கான் தவழும் மாலையொடு கல் மணிகள் கண் பூத்து,
ஊன் தவழும் யாக்கை உடை நாயகனை நோக்க,
மீன் தவழும் வெண் மதியின் மெய்யன் உரு மிக்கான்.

     வானத்தில் தவழும் விண்மீன்கள் திரளாகப் பூத்ததுபோல, தேன்
நிறைந்து மணம் வீசும் மலர் மாலையோடு கல்லாகிய மணிகளும் தம்
கண்களைத் திறந்து, ஊனாலாகிய உடலைக் கொண்டுள்ள ஆண்டவனை
இமையாது நோக்கிய வண்ணம் இருக்க, மெய்யனாகிய ஆண்டவன்
விண்மீன்களிடையே தவழும் வெண்மதி போலத் தன் உருவம் சிறந்து
விளங்கினான்.

                  87
தும்மியபொ றிச்சுடர்து தைந்தெரியு செந்தீ
விம்மியவி ருட்புகைவி ளைத்தநர கெய்தா
பம்மியவி னைப்பகைப ரிந்துயிர்கள் காப்பப்
பொம்மியது யர்க்கிறைவ பொன்றுவைகொ லென்பார்.
 

"தும்மிய பொறிச் சுடர் துதைந்து எரியு செந்தீ
விம்மிய இருள் புகை விளைத்த நரகு எய்தா,
பம்மிய வினைப்பகை பரிந்து உயிர்கள் காப்ப,
பொம்மிய துயர்க்கு, இறைவ, பொன்றுவைகொல்!" என்பார்

     "சிதறிய தீப்பொறியோடு சுடர் செறிந்து எரியும் செந்நிற நெருப்பு
கூடவே பொங்கிய இருளையும் புகையையும் விளைவிக்கக் கூடிய
நரகத்தை அடையாதவாறு, இவ்வுலகில் படர்ந்துள்ள பாவ வினையாகிய
பகையை அரிந்து உயிர்களைக் காக்கும் பொருட்டு, ஆண்டவனே, நீ
மிக்க துயரங்களுக்கு ஆளாகி இறப்பாயோ!" என்பார் சிலர்.
 
                     88
தீய்வினைசெய் நாமகிழ வும்பர்தொழு செல்வா
நீய்வினைசெய் மெய்க்கொடுநி லத்திலுல வாயோ
வீய்வினைசெய் மெய்யுனைய விண்ணிலெமை யுய்க்குந்
தாய்வினைசெய் யுன்றயையை யாரறிவ ரென்பார்.
 
"தீய் வினை செய் நாம் மகிழ, உம்பர் தொழு செல்வா,
நீய் வினை செய் மெய்க் கொடு நிலத்தில், உலவாயோ?
வீய் வினை செய் மெய் உளைய, விண்ணில் எமை உய்க்கும்,
தாய் வினை செய் உன் தயையை யார் அறிவர்!" என்பார்.