"வெவ் வினை
அறுத்து உயிர் விளைத்த கனி ஆக,
உய்வினை எமக்கு அருள உற்றன பிரானை,
எவ் வினையும் அற்ற முறை ஈன்ற அருள் தாயே,
மை வினையை நாம் கழிய வாழி நனி!" என்பார். |
சிலர் மரியாளை
நோக்கி, "தீவினையை அறுத்து உயிரைத்
தழைப்பிக்கும் கனி போல, எங்களுக்கெல்லாம் ஈடேற்றம் அருளுமாறு
அவதரித்து வந்த ஆண்டவனை, எவ்விதமான குறையும் அற்ற முறையிலே
பெற்றெடுத்த அருள் நிறைந்த தாயே, நாங்களெல்லாம் பாவ வினையைக்
கடக்குமாறு நீ நன்கு வாழ்வாயாக!" என்பார்.
'உய்வினை, மைவினை'
என்பன, எதுகைப் பொருட்டு, 'உய்வ்வினை,
மைவ்வினை' என விரிந்து நின்றன.
91 |
ஆரணமெ ழுந்துபடர்
கொம்பனைய மார்ப
காரணனோர் மைந்தனைவ ளர்த்திடுகைத் தாதைப்
பூரணவ ரத்தமரர் நிற்புகழ வின்ப
வாரணம மிழ்ந்திநனி வாழிநெடி தென்பார். |
|
"ஆரணம் எழுந்து
படர் கொம்பு அனைய மார்ப,
காரணன் ஓர் மைந்தனை வளர்த்திடு கைத் தாகைப்
பூரண வரத்து, அமரர் நிற் புகழ, இன்ப
வாரணம் அமிழ்ந்தி, நனி வாழி நெடிது!" என்பார். |
வேறு சிலர் சூசையை
நோக்கி, "வேதம் வளர்ந்து படரும்
கொழுபொம்பு போன்ற மார்பு கொண்டவனே, எல்லாவற்றிற்கும் காரணனான
ஒரு மகனை வளர்க்கும் கைத்தாதை என்னும் பூரண வரத்தை முன்னிட்டு,
வானவரெல்லாம் உன்னைப் புகழ, இன்பக் கடலில் மூழ்கி, நெடுங்காலம்
நன்கு வாழ்வாயாக!" என்பார்.
சீமையோன்
இறைவாக்கு
-விளம், -மா,
தேமா, -விளம், -மா, தேமா
92 |
ஏமஞ்சா
லின்பத் தங்க ணின்னவை யாகி, மூத்தோன்
சேமஞ்சால் வரங்கண் மிக்குத் தெளிந்தமுப் பொழுதுந் தாவி
வாமஞ்சால் காட்சி வாய்ந்த வரும்பொரு ளுணர்த்தித் தாயுஞ்
சோமஞ்சால் கொடிவல் லோனுந் துயருறச் சொற்றி னானே. |
|