ஏமம் சால் இன்பத்து
அங்கண் இன்னவை ஆகி, மூத்தோன்,
சேமம் சால் வரங்கள் மிக்கு, தெளிந்த முப்பொழுதும் தாவி,
வாமம் சால் காட்சி வாய்ந்த வரும் பொருள் உணர்த்தி, தாயும்
சோமம் சால் கொடி வல்லோனும் துயர் உறச் சொற்றினானே. |
களிப்பு
மிக்க இன்பத்தொடு அங்கு இவையெல்லாம் நிகழ்ந்து
கொண்டிருக்கையில், முதிர் வயதினனாகிய சீமையோன், தனக்குக் காவலாக
அமைந்த வரங்களால் மிகுந்து, இறப்பு நிகழ்வு எதிர்வு என வேறுபடத்
தெளிந்த முக்காலமும் தனக்கு ஒரு காலம் என்பதுபோல் தாவி உணர்ந்து,
அழகு மிக்க தெய்வக் காட்சியால் கிட்டிய வருங்காலச் செய்தியை எடுத்து
உணர்த்தி, தாயாகிய மரியாளும் தேன் நிறைந்த மலர்க் கொடியைத் தாங்கிய
வல்லவனாகிய சூசையும் துயரம் அடையப் பின்வருமாறு சொல்லலுற்றான்:
93
|
திருக்கிள
ரின்ன தோன்றல் சிலர்க்குயிர் சிலர்க்குக் கேடாய்ச்
செருக்கிளர் பகைவ ரேவுஞ் சினக்கணைக் குறியென் றாவா
னுருக்கிளர் நெஞ்சம் போழ்தற் குறுகண்வா ளுருவப் பாய்ந்து
தருக்கிளர் தரும தாயே தளர்ந்திடர் குளிப்பா யென்றான். |
|
"திருக்கிளர்
இன்ன தோன்றல் சிலர்க்கு உயிர் சிலர்க்குக் கேடாய்,
செருக்கிளர் பகைவர் ஏவும் சினக் கணைக் குறி என்று ஆவான்!
உருக்கிளர் நெஞ்சம் போழ்தற்கு உறுகண் வாள் உருவப் பாய்ந்து,
தருக்கிளர் தரும தாயே, தளர்ந்து இடர் குளிப்பாய்!" என்றான். |
"அழகு
மிக்க இம்மகன் சிலருக்கு உயிராகவும் சிலருக்குக் கேடாகவும்,
போருக்குக் கிளர்ந்து எழுகின்ற பகைவர் ஏவும் சினமாகிய அம்புக்கு இட்டு
வைத்த இலக்குப் போலவும் அமைவான்! மரம் போல் தழைத்த புண்ணிய
வளங் கொண்ட தாயே, உன் அழகு நிறைந்த நெஞ்சைப் பிளக்கத் தக்க
வகையில், துன்பமென்னும் வாள் ஊடுருவப் பாய்ந்து, தளர்ந்து நீ
துயரக்கடலில் மூழ்குவாய்!" என்றான்.
புதிய ஏற்பாடு,
லூக்காஸ், 2 : 34 - 35 காண்க.
|