94
|
என்றன
கடுஞ்சொல் வாளா லிருசெவி முதலீர்ந் தங்கண்
ணின்றன விருவர் நோக நிலத்திலெம் வினைக டீர்ப்பச்
சென்றன நாதன் றன்றூய் செம்புனற் சிந்தி மாள்வான்
பின்றென வுளத்தி லோர்ந்தார் பீடை நீண் புணரி தாழ்ந்தே. |
|
என்றன கடுஞ்
சொல் வாளால் இரு செவி முதல் ஈர்ந்து, அங்கண்
நின்றன இருவர், நோக, 'நிலத்தில் எம் வினைகள் தீர்ப்பச்
சென்றன நாதன், தன் தூய் செம்புனல் சிந்தி மாள்வான்
பின்று' என உளத்தில் ஓர்ந்தார், பீடை நீண் புணரி தாழ்ந்தே. |
என்று
இவ்வாறு சீமையோன் கூறிய கடுஞ் சொல்லாகிய வாளினால்
தத்தம் இரு செவிகள் வழியாக மனமும் உயிரும் அறுக்கப்பட்டது போல்
அங்கு நின்ற அவ்விருவரும் நொந்து, துன்பமென்னும் நெடுங்கடலில் மூழ்கி,
'அந்த ஆண்டவன், நம் பாவ வினைகளைத் தீர்க்கும் பொருட்டு இம்
மண்ணுலகில் இவ்வாறு வந்து பிறந்து, பின் நாளில் தன் தூய உதிரத்தைச்
சிந்தி மடிவான்!" என்று தம் உள்ளத்தில் உணர்ந்தனர்.
'ஓர்ந்தார்
தாழ்ந்தே' என்பதனை, 'ஓர்ந்து தாழ்ந்தார்' என நேர்
பொருள் செய்க. 'என்றன,' 'நின்றன' 'சென்றன' என்ற இடங்களில் இடையே
நின்ற 'அன்' சாரியை எனக் கொள்க.
95
|
நூனிலங் காட்சி
மூத்தோ னுதலியாங் குரைத்த சொல்லைத்
தேனில முகையி னின்ற திருநர தேவன் கேட்டுக்
கானில முகைவிண் டன்ன கனிந்தபுன் முறுவல் கொட்டி
மீனிலஞ் சென்னி சாய்த்து விழைந்ததற் கமைந்தான் மன்னோ. |
|
நூல் நிலம் காட்சி
மூத்தோன் நுதலி ஆங்கு உரைத்த சொல்லை,
தேன் நில முகையின் நின்ற திரு நர தேவன் கேட்டு,
கான் நில முகை விண்டு அன்ன கனிந்த புன் முறுவல் கொட்டி,
மீனில் அம் சென்னி சாய்த்து, விழைந்து அதற்கு அமைந்தான் மன்னோ. |
|