பக்கம் எண் :

முதற் காண்டம்772

     நூலறிவுக்கெல்லாம் நிலைக்களனாகிய தெய்வக் காட்சியைப்
பெற்றிருந்த முதிய சீமையோன் கருதி அங்கு உரைத்த அச் சொல்லை,
தேனைக் கொண்டுள்ள மொட்டுப் போல் அங்கிருந்த மனிதனும்
இறைவனுமாகிய திருக்குழந்தை நாதன் கேட்டு, வாசனை கொண்டுள்ள
மொட்டு விரிந்ததுபோலக் கனிவான புன்னகை காட்டி, விண்மீனினும்
அழகிய தன் தலையைப் பணிந்த வண்ணமாய்ச் சாய்த்து, அதற்கு
விருப்பத்தோடு அமைந்தான்.

     'மன்னோ' அசைநிலை.

                அன்னம் என்னும் கைத் தாய்
 
                      96
இன்னிய மொலிக்குங் கோயி லிவையிவர்ந் தங்கண் வைகுங்
கன்னிய மாதர்க் கெல்லாங் கனிந்தகைத் தாயாய் மீன்செய்
மின்னிய முடியா டன்னை விரும்பிமுன் வளர்த்த மாட்சி
துன்னிய வன்ன மென்பாள் துன்னிவந் திளவற் கண்டாள்.
 
இன் இயம் ஒலிக்கும் கோயில் இவை இவர்ந்து, அங்கண் வைகும்
கன்னிய மாதர்க்கு எல்லாம் கனிந்த கைத் தாயாய், மீன் செய்
மின்னிய முடியாள் தன்னை விரும்பி முன் வளர்த்த மாட்சி
துன்னிய அன்னம் என்பாள் துன்னி வந்து இளவற் கண்டான்.

     இனிய இசைக் கருவிகள் ஒலிக்கும் கோவிலில் இவையெல்லாம்
நடக்கையில், அங்குத் தங்கி வாழும் கன்னிமை விரதம் பூண்ட
மகளிர்க்கெல்லாம் கனிவுள்ள வளர்ப்புத் தாயாய் அமைந்து,
விண்மீன்களாலாகிய ஒளியுள்ள முடியை அணிந்த மரியாளை முன்
விரும்பி வளர்த்த மாட்சியும் பொருந்திய அன்னம் என்பாள் அணுகி
வந்து குழந்தை நாதனைப் பார்த்தாள்.
 
                      97
தேன்றும்மு மாலை சேர்த்தித் திருவடி பணிந்து நம்மா
லூன்றும்மு வேல்வாய் பின்னா ளுறுந்துய ருணர்ந்து
                                  நொந்து
வான்றும்மு மின்னின் மின்னு மகவினை நெடிது வாழ்த்திக்
கான்றும்மு முகப்பூந் தேனுண் கண்கனிந் திமைத்தல்
                                  செய்யாள்.