அவ்வியம் ஒழித்து
அருள் அளிக்கும் மா மறைத்
திவ்விய மதுர நூல் செப்பும் சாலையும்,
நவ்விய உணர்வு உறீஇ எவையும் நாடி,
உள் வவ்விய பல கலை வகுக்கும் சாலையும். |
மனக் கோட்டத்தைப்
போக்கித் தெய்வ அருளை வழங்கும் திவ்விய
இனிய பெருமை வாய்ந்த வேத நூலைப் போதிக்கும் வேத பள்ளிகளும்
அந்நகரில் உள்ளன. தெளிந்த உணர்வு கொண்டு எவற்றையும் ஆராய்ந்து,
உள்ளத்தைக் கவர்ந்த பல கலைகளைக் கற்பிக்கும் கல்விச் சாலைகளும்
உள்ளன.
34
|
பெற்றியார்
குணில்கவண் பெரும்வில் நேமியோர்
குற்றிலாக் குறிப்படக் குமுறுஞ் சாலையும்
வெற்றியா ரலங்கல்வாள் முதல்பல் வேற்படை
பற்றிலார் வெருவுறப் பழக்குஞ் சாலையும். |
|
பெற்றி
ஆர் குணில் கவண் பெரும் வில் நேமியோர்,
குற்று இலாக் குறிப் படக் குமுறுஞ் சாலையும்,
வெற்றி ஆர் அலங்கல் வாள் முதல் பல் வேல் படை
பற்று இலார் வெரு உறப் பழக்கும் சாலையும் |
நல்லியல்பு
பொருந்திய குறுந்தடி, எறிகவண், பெரிய வில், சக்கரம்
போன்ற எறிபடைகளை உடையோர், அவை குற்றமில்லாத குறியிலே
படக்கண்டு முழங்கும் போர்ப் பயிற்சிக் கூடங்களும் உள்ளன. வெற்றி
நிறைந்த மாலை சூடிய வாள் முதல் வேல் வரையிலுள்ள கைப்படைகள்
பகைவர் அஞ்சுமாறு செலுத்தப் பழக்கும் சாலைகளும் உள்ளன.
குற்று
- 'குற்றம்' என்ற சொல்லின் கடைக்குறை.
35
|
கானல
கனியினுங் கனிந்த யாழொடு
தேனல பல்லியந் திளைக்குஞ் சாலையும்
பானல மொழிந்தபாப் பாடி யாடிவிண்
மேனல மெனவொலி விம்முஞ் சாலையும் |
|
கான்
நல கனியினும் கனிந்த யாழொடு
தேன் நல பல் இயம் திளைக்கும் சாலையும்,
பால் நலம் ஒழித்த பாப் பாடி ஆடி விண்
மேல் நலம் என ஒலி விம்மும் சாலையும் |
|