ஆலயச்
சிறப்பு
-
விளம், - மா, - விளம், - மா, - விளம், - விளம், - மா
39 |
மண்ணிய
முடியோ முடியின்மா மணியோ வானிடை
வயங்குசெஞ் சுடரோ
புண்ணிய வுடலத் துயிர்கொலோ முகமோ பொலமுகக்
கண்கொலோ யாதோ
கண்ணிய வளவற் றிடமெலா நிறைந்த கடவுடா
னுறைந்தருள் காட்டப்
பண்ணிய வம்மா நகரிடைப் பகலைப் பழித்தெரி
பரந்தவா லயமே. |
|
மண்ணிய
முடியோ, முடியின் மா மணியோ, வான் இடை
வயங்கு செஞ் சுடரோ,
புண்ணிய உடலத்து உயிர் கொலோ, முகமோ, பொலம் முகக்
கண் கொலோ, யாதோ,
கண்ணிய அளவு அற்று இடம் எலாம் நிறைந்த கடவுள், தான்
உறைந்து அருள் காட்டப்
பண்ணிய அம் மாநகர் இடைப் பகலைப் பழித்து எரி
பரந்த ஆலயமே? |
கருதக் கூடிய
அளவெல்லாம் கடந்து எல்லா இடங்களிலும்
நிறைந்துள்ள கடவுள், தாம் தங்கியிருந்து மக்களுக்கு அருள் காட்ட வென்று
அவ் வெருசலேம் மாநகரில் அமைந்துள்ளதும் பகலவனைப் பழிக்கத் தக்க
ஒளி பரந்ததுமான ஆலயம், அலங்கரித்த முடியோ? அம்முடியில் அமைந்த
பெரிய மாணிக்கமோ? வானத்தில் விளங்கும் செஞ்சுடர் கொண்ட
கதிரவனோ? புண்ணியம் செய்த உடலிற் பொருந்தியுள்ள உயிரேதானோ?
உடலிடத்து முகமோ? அழகிய முகத்தில் அமைந்த கண்ணேதானோ?
யாதென்று சொல்வோம்?
40
|
பொற்பொதிர்
வயிரக் கான்மிசை பவளப் போதிகை
பொருந்திய
தொருபால்
விற்பொதிர் துகிர்க்கான் மரகத மணியால் விளங்கிய
போதிகை
யொருபா
லெற்பொதிர் நிதிக்கா லமைந்தபோ திகையா யினமணி
கிடத்திய
தொருபால்
செற்பொதிர் மின்னின் மின்னிமுன் னிரையிற் செறிந்தபல்
மண்டப
நிலையே |
|