யாக்கோபுவுக்குத்
தோன்றிய ஏணி : ப. ஏ., ஆதியாகமம் 28 :
10 - 17 காண்க. இதே நிகழ்ச்சி மறுபடியும் தேம்பாவணியில் கூறப்படுவதை
3 : 19 - 12 காண்க.
43 |
தூண்டொடர்
பொலிந்த முகட்டுயர் விளங்குந் தூய பொற்
றகட்டுமேற் படர்ந்து
சேண்டொடர் பருதி தன் கதிர் படலிற் செறிந்தபல்
லணியணி கிளர்ந்த
பூண்டொட ரணியார் தனதுருக் கண்டு பொருவிறோர்த்
துட் கெனச் சாய
மாண்டொட ரிரவி யாயிர மென்ன வயங்குமவ் வாலய
மாதோ. |
|
தூண்
தொடர் பொலிந்த முகட்டு உயர் விளங்கும் தூய பொன்
தகட்டு மேல் படர்ந்த
சேண் தொடர் பருதி தன் கதிர் படலின், செறிந்த பல் அணி
அணி கிளர்ந்த
பூண் தொடர் அணி ஆர் தனது உருக் கண்டு, பொருவு இல்
தோர்த்து உட்கு எனச் சாய,
மாண் தொடர் இரவி ஆயிரம் என்ன வயங்கும் அவ் ஆலயம்
மாதோ. |
தூண்களின்
வரிசைமேல் பொலிவுடன் விளங்கிய ஆலயத்து
மோட்டின்மேல் விளங்கும் தூய பொன் தகட்டின் மேல், தூரத்தில் சென்று
கொண்டிருந்த சூரியன் கதிர்கள் பரவலாகப் படுதலால், செறிந்த,
அணியணியாகத் தகட்டினின்று கிளர்ந்த பல ஆபரணங்களின் தொடர்போல்
அழகு நிறைந்த தன் உருவத்தையே கதிரவன் கண்டு, தன் இயற்கை உருவம்
தகட்டிற் கண்ட உருவத்திற்கு ஒப்பாகாமல் தோற்று நாணியதுபோல் சோர,
மாண் போடு தொடர்ந்து ஆயிரம் ஞாயிறு போல அவ்வாலயம் விளங்கும்.
'மாதோ'
அசைநிலை.
44
|
துன்னரு
மெழில் செய் யிண்புணும் விழிக்குஞ் சுருதிநூ
லினிமையிற் காட்டப்
பொன்னரு மிழையா னிரைநிரை சுவரிற் புடைத்தெழப்
பலவுருக் கிளம்ப
வுன்னரும் வனப்பிற் கிளரொளி வாய்ந்த வுயிர்பெறச்
சித்திரந் தீட்டி
யின்னருங் கவின்கண் டயர்வுறீஇ யுரையு மிமைப்புமில்
லாயின மாதோ. |
|