பக்கம் எண் :

முதற் காண்டம்86

துன்ன அரும் எழில் செய் இன்பு உணும் விழிக்கும் சுருதி
                     நூல் இனிமையின் காட்ட,
பொன் அரும் இழையான் நிரை நிரை சுவரில் புடைத்து                      எழப் பல உருக் கிளம்ப
உன்னஅரும் வனப்பின் கிளர் ஒளி வாய்ந்த உயிர் பெறச்
                     சித்திரம் தீட்டி,
இன் அருங் கவின் கண்டு அயர்வு உறீஇ உரையும்                      இமைப்பும் இல் ஆயின மாதோ.

     அடைவதற்கு அரிய அழகு தரும் இன்பத்தைத் தேடி அனுபவிக்கும்
இயல்புள்ள கண்களுக்கும் வேத நூலின் இனிமையை அவ்வழகுணர்ச்சியைக்
கருவியாகக் கொண்டு காட்டுமாறு, பொன்னால் அரிய வேலைப்பாட்டுடன்
வரிசை வரிசையாகச் சுவரில் புடைத் தெழுந்து தோன்றுமாறு பல சிற்ப
உருவங்களைச் சிற்பிகள் அமைத்தனர். நினைத்தற்கு அரிய அழகோடு உயிர்
கொண்ட தன்மையாய்க் கிளர்ந்த ஒளி வாய்ந்த சித்திரங்களைத் தீட்டினர்.
அரிய அவ்வழகை அச்சிற்பங்களும் சித்திரங்களும் தாமே கண்டு உண்மை
உருவங்களென அயர்வு அடைந்து, வாய்ப் பேச்சும் கண் இமை
கொட்டுதலும் இல்லாது போயின.

     அவற்றை அமைந்தவர்கள் அவை வாய்ப் பேச்சும் கண் இமைப்பும்
இல்லாது போயினவே என்று அயர்ந்து மயங்கினர்.

     துன்னரும், உன்னரும் என்பன, 'துன்னவரும், 'உன்னவரும்'
என்பவற்றின் தொகுத்தல் விகாரங்கள் 'மா' 'தோ' அசைநிலை.
சிற்பங்களையும் சித்திரங்களையும் கண்டவர் அயர்வுற்று உரையும்
இமைப்பும் இலராயினர் என்று கொள்வதும் ஒன்று.
   
                       45
வான்மணி விளக்கோ ராயிர மிழைத்த மரகதத் திருளறக்
                                கற்றை
கான்மணி விளக்கோ ராயிரம் பவளங் கலந்தமுத்
                                தணியணி தயங்க
நீன்மணி விளக்கோ ராயிரம் பசும்பொன் னிலைவிளக்
                                காயிரம் வயிரப்
பான்மணி விளக்கோ ராயிர மெவணும் பகலவன்
                                படப்பகல் செயுமால்.