வான் மணி விளக்கு
ஓர் ஆயிரம், இழைத்த மரகதத்து இருள்அறக்
கற்றை
கால் மணி விளக்கு ஓர் ஆயிரம், பவளம் கலந்த முத்து அணி
அணி தயங்க
நீல் மணி விளக்கு ஓர் ஆயிரம், பசும் பொன் நிலை விளக்கு
ஆயிரம், வயிரப்
பால் மணி விளக்கு ஓர் ஆயிரம், எவணும் பகலவன் படப் பகல்
செயும் ஆல். |
சிறந்த மாணிக்க
விளக்குகள் ஆயிரமும், பதித்த மரகதத்தால் இருள்
நீங்குமாறு கதிர்த் திரளைப் பொழியும் மணி விளக்குகள் ஓராயிரமும்,
பவளத்தோடு இடையிட்டுக் கலந்த முத்துக்கள் வரிசை வரிசையாக விளங்க
நீல மணியால் அமைத்த விளக்குகள் ஓராயிரமும், பசும் பொன்னாற் செய்த
நிலை விளக்குகள் ஆயிரமும், பால் போன்ற வெண்ணிற மணியாகிய
வைரத்தால் ஆகிய விளக்குகள் ஓராயிரமுமாக, அவ்வாலயத்து எங்கும்
பகலவனும் மங்கத் தக்க ஒளியைத் தந்து நிற்கும்.
'ஆல்' அசை
நிலை. 'மணி' என்ற பொதுப் பெயர் சிறப்பு வகையில்
தனக்கே உரியதாதலின், மாணிக்கம் 'வான்மணி' எனப்பட்டது. நீல் - 'நீலம்'
என்ற சொல்லின் இடைக்குறை. நிலை விளக்கு - குத்து விளக்கு.
46 |
தீயெரி
வாய்ந்த குருமணி யாதி செறிந்தபன் மணிகளு மகன்ற
வாயெரி விளக்கின் றொருதியு மல்கி வயின்வயி னெரிந்தபைம்
பொன்னு
மாயெரி திரண்டு விழித்தகண் கூச வகின்முதல் நறும்புகை
நாளும்
மீயெரி சுடரை யிளமுகில் மூடி வேய்ந்தெனக் குளிரவேய்ந்
தனவே. |
|
தீ எரி வாய்ந்த
குரு மணி ஆதி செறிந்த பல் மணிகளும், அகன்ற
வாய்எரி விளக்கின் தொகுதியும் மல்கி, வயின் வயின் எரிந்த பைம்
பொன்னும்
ஆய் எரி திரண்டு, விழித்த கண் கூச, அகில் முதல் நறும் புகை
நாளும்
மீ எரி சுடரை இளமுகில் மூடி வேய்ந்து எனக் குளிர வேய்ந்தனவே. |
|